தொடக்கம் |
102. திருநாரையூர் - பழம்பஞ்சுரம்
|
|
|
3890. |
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம்
தாங்கு
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய,
பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்)
உரி-தோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே. 1 |
|
உரை
|
|
|
|
|
3891. |
தீவினை ஆயின தீர்க்க நின்றான்-திரு
நாரையூர் மேயான்;
பூவினை மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம்,
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார்
மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான், கழலே பரவா எழுவோமே.
2 |
|
உரை
|
|
|
|
|
3892. |
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம்
சேரும்
மைமிடற்றன்
ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை
ஆகம்
தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர்
தன்னில்
மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின
வீடுமே. 3 |
|
உரை
|
|
|
|
|
3893. |
துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல் துளங்கும்
உடம்பினராய்,
அம் சுடர் ஆர் எரி ஆடுவர்; ஆர் அழல் ஆர் விழிக்கண்,
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர்; நலன் ஓங்கு
நாரையூர்
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை, ஏதமே.
4 |
|
உரை
|
|
|
|
|
3894. |
பொங்கு இளங் கொன்றையினார், கடலில்
விடம் உண்டு
இமையோர்கள்
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர், சடைமேல் ஓர்
திங்களை வைத்து அனல் ஆடலினார், திரு நாரையூர் மேய
வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே.
5 |
|
உரை
|
|
|
|
|
3895. |
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி,
பைங்கொன்றைத்-
தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன்,
மலைமகளைச்
சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை-
யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று
ஒவ்வாவே. 6 |
|
உரை
|
|
|
|
|
3896. |
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர்,
கண் நுதலார்
வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு
ஆர்த்து,
நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன்நலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின
ஓடுமே. 7 |
|
உரை
|
|
|
|
|
3897. |
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன்
ஓங்கு நாரையூர்
தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில,
ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில்,
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.
8 |
|
உரை
|
|
|
|
|
3898. |
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான்,
ஒளிர்புன்சடைமேல் ஓர்
வான் இடை வெண்மதி வைத்து உகந்தான், வரிவண்டு
யாழ்முரலத்
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு
நாரையூர் மேய
ஆன் இடை ஐந்து உகந்தான், அடியே பரவா,
அடைவோமே. 9 |
|
உரை
|
|
|
|
|
3899. |
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார்,
உடம்பினில்
உள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே,
தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர்
தன்னில்
பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே!
10 |
|
உரை
|
|
|
|
|
3900. |
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ்
ஞானசம்பந்தன்,
ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல்,
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை
போகி,
மண் மதியாது போய், வான் புகுவர், வானோர்
எதிர்கொளவே. 11 |
|
உரை
|
|
|
|