109. திருக்கயிலாயமும் திருஆனைக்காவும் - திருமயேந்திரமும் திருஆரூரும் - பழம்பஞ்சுரம் - கூடற்சதுக்கம்
 
3967. மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா
வெண்நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணது ஓங்கிய கயிலையாரும்,
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே.      1
உரை
   
3968. வந்து மால் அயன் அவர் காண்பு அரியார்
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்;
கந்த வார்சடை உடைக் கயிலையாரும்;
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே.      2
உரை
   
3969. மால் அயன் தேடிய மயேந்திரரும்,
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்,
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்,
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே.      3
உரை
   
3970. கருடனை ஏறு அரி, அயனார், காணார்
வெருள் விடை ஏறிய மயேந்திரரும்;
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும்;
அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.      4
உரை
   
3971. மதுசூதனன் நான்முகன் வணங்க(அ)ரியார்
மதி அது சொல்லிய மயேந்திரரும்,
கதிர்முலை புல்கிய கயிலையாரும்,
அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.      5
உரை
   
3972. சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்,
தக்கனைத் தலை அரி தழல் உருவர்
அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே.      6
உரை
   
3973. கண்ணனும், நான்முகன், காண்பு அரியார்
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள்
அண்ணல், ஆரூர் ஆதி ஆனைக்காவே.      7
உரை
   
3974. கடல் வண்ணன் நான்முகன் காண்பு அரியார்
தடவரை அரக்கனைத் தலை நெரித்தார்
விடம் அது உண்ட எம் மயேந்திரரும்;
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே.      8
உரை
   
3975. ஆதி, மால் அயன் அவர் காண்பு அரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்;
காதில் ஒர் குழை உடைக் கயிலையாரும்;
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே.      9
உரை
   
3976. அறிவு இல் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்!
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்,
மறிகடலோன் அயன் தேடத் தானும்
அறிவு அரு கயிலையோன்-ஆனைக்காவே.      10
உரை
   
3977. ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார்
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்,
ஆன ஆரூர், ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே!      11
உரை