113. திருக்கழுமலம் - திருஇயமகம் - பழம்பஞ்சுரம்
 
4012. உற்று உமை சேர்வது மெய்யினையே; உணர்வதும் நின்
                                        அருள் மெய்யினையே;
கற்றவர் காய்வது காமனையே; கனல் விழி காய்வது
                                                          காமனையே;
அற்றம் மறைப்பதும் உன் பணியே; அமரர்கள் செய்வதும்
                                                   உன் பணியே;
பெற்று முகந்தது கந்தனையே; பிரமபுரத்தை உகந்தனையே.
                                                                       1
உரை
   
4013. சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம்
                                                             தரனே!
அதிர் ஒளி சேர் திகிரிப்படையால் அமர்ந்தனர் உம்பர்,
                                              துதிப்பு அடையால்,
மதி தவழ் வெற்பு அது கைச் சிலையே; மரு விடம் ஏற்பது
                                                       கைச்சிலையே
விதியினில் இட்டு அவிரும் பரனே! வேணுபுரத்தை விரும்பு
                                                       அரனே!      2
உரை
   
4014. காது அமரத் திகழ் தோடினனே; கானவனாய்க் கடிது
                                                          ஓடினனே;
பாதம் அதால் கூற்று உதைத்தனனே; பார்த்தன் உடல் அம்பு
                                                          தைத்தனனே;
தாது அவிழ் கொன்றை தரித்தனனே; சார்ந்த வினை அது
                                                         அரித்தனனே
போதம் அமரும் உரைப் பொருளே, புகலி அமர்ந்த
                                                       பரம்பொரு      3
உரை
   
4015. மைத் திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை
                                   சேர்வதும்; மா சு(ண்)ணமே
மெய்த்து உடல் பூசுவர்; மேல் மதியே; வேதம் அது ஓதுவர்,
                                                    மேல் மதியே;
பொய்த் தலை ஓடு உறும், அத்தம் அதே; புரிசடை வைத்தது,
                                                    மத்தம் அதே;
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர்,
                                                     வெங்குருவே.      4
உரை
   
4016. உடன் பயில்கின்றனன், மாதவனே, உறு பொறி காய்ந்து
                                                இசை மா தவனே;
திடம் பட மாமறை கண்டனனே, திரிகுணம் மேவிய
                                                        கண்டனனே;
படம் கொள் அரவு அரை செய்தனனே; பகடு உரிகொண்டு
                                                 அரை செய்தனனே;
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே, தோணிபுரத்து
                                       உறை நம் சிவனே.      5
உரை
   
4017. திகழ் கையதும் புகை தங்கு அழலே; தேவர் தொழுவதும்
                                                            தம் கழலே;
இகழ்பவர் தாம் ஒரு மான் இடமே; இருந் தனுவோடு எழில்
                                                              மானிடமே;
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே, மின்
                                    நிகர்கின்றதும், அம் சடையே,
தக இரதம் கொள் வசுந்தரரே, தக்க தராய் உறை சுந்தரரே.
                                                                          6
உரை
   
4018. ஓர்வு அரு கண்கள் இணைக்க(அ)யலே; உமையவள் கண்கள்
                                                         இணைக் கயலே;
ஏர் மருவும் கழல் நாகம் அதே; எழில் கொள் உதாசனன்,
                                                            ஆகம் அதே;
நீர் வரு கொந்து அளகம் கையதே, நெடுஞ்சடை மேவிய
                                                            கங்கையதே;
சேர்வு அரு யோக தியம்பகனே! சிரபுரம் மேய தி அம்பு
                                                               அகனே!      7
உரை
   
4019. ஈண்டு துயில் அமர் அப்பினனே இருங் கண் இடந்து அடி
                                                           அப்பினனே;
தீண்டல் அரும் பரிசு அக் கரமே திகழ்ந்து ஒளி சேர்வது
                                                             சக்கரமே;
வேண்டி வருந்த நகைத் தலையே மிகைத்து அவரோடு
                                                         நகைத்தலையே
பூண்டனர்; சேரலும் மா பதியே, புறவம் அமர்ந்த
                                                     உமாபதியே.      8
உரை
   
4020. நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர்
                                                       நீழலையே;
உன்னி, மனத்து, எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு
                                                        சங்கம் அதே;
கன்னியரைக் கவரும் க(ள்)ளனே! கடல்விடம் உண்ட கருங்
                                                               களனே;
மன்னி வரைப் பதி, சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை
                                                               அதே.      9
உரை
   
4021. இலங்கை அரக்கர் தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க,
                                                               இறையே,
புலன்கள் கெட உடன் பாடினனே; பொறிகள் கெட
                                                          உடன்பாடினனே;
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே;
கலந்து அருள் பெற்றதும் மா வசியே; காழி அரன் அடி மா
                                                         வசியே.      10
உரை
   
4022. கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி புண் தரி
                                                            கத்தினனே,
மண் நிகழும் பரிசு ஏனம் அதே, வானகம் ஏய் வகை
                                                          சேனம் அதே,
நண்ணி அடிமுடி எய்தலரே; நளிர் மலி சோலையில் எய்து
                                                                அலரே
பண் இயல் கொச்சை பசுபதியே, பசு மிக ஊர்வர்,
                                                       பசுபதியே.      11
உரை
   
4023. பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது
                                               இலை அவை எதிரே
வரு நதி இடை மிசை வரு கரனே! வசையொடும் அலர்
                                              கெட அருகு அரனே!
கருதல் இல் இசை முரல்தரும் மருளே, கழுமலம் அமர்
                                                   இறை தரும் அருகே
மருவிய தமிழ்விரகன மொழியே வல்லவர்தம் இடர், திடம்,
                                                      ஒழியே.      12
உரை