தொடக்கம் |
115. திருஆலவாய் - திருஇயமகம் - பழம்பஞ்சுரம்
|
|
|
4035. |
ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல்
உகந்தது
இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர்
புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம்
மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை
அண்டர்கள் அத்தனே. 1 |
|
உரை
|
|
|
|
|
4036. |
பாதி ஆய் உடன் கொண்டது மாலையே; பம்பு
தார் மலர்க்
கொன்றை நல்மாலையே;
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே; கொண்ட நன்
கையில் மான் இடம் ஆகனே;
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன் ஐயே; நாடி அன்று
உரிசெய்ததும் ஆனையே;
வேத நூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல
நல்வாயிலே. 2 |
|
உரை
|
|
|
|
|
4037. |
காடு நீடது உறப் பல கத்தனே; காதலால்
நினைவார்தம்
அகத்தனே;
பாடு பேயோடு பூதம் மசிக்கவே, பல்பிணத் தசை நாடி
அசிக்கவே;
நீடும் மாநடம் ஆட விருப்பனே; நின் அடித் தொழ நாளும்
இருப்பனே;
ஆடல் நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய
அப்பனே. 3 |
|
உரை
|
|
|
|
|
4038. |
பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம்
ஓதினர்
பாவம் மறுத்தியே;
துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே; தூய வெள் எருது
ஏறி இருத்தியே;
கண்டு காமனை வேவ விழித்தியே; காதல் இல்லவர் தம்மை
இழித்தியே
அண்ட நாயகனே! மிகு கண்டனே! ஆலவாயினில்
மேவிய(அ) கண்டனே! 4 |
|
உரை
|
|
|
|
|
4039. |
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி,
அன்பு
செகுத்தனன்பால் ஐயே
வென்றி சேர் மழுக்கொண்டு, முன்காலையே, வீட வெட்டிடக்
கண்டு, முன் காலையே,
நின்ற மாணியை, ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து,
அனகம் கையால்,
அன்று, நின் உரு ஆகத் தடவியே! ஆலவாய், அரன்
நாகத்து அடவியே. 5 |
|
உரை
|
|
|
|
|
4040. |
நக்கம் ஏகுவர், நாடும் ஓர் ஊருமே; நாதன்
மேனியில்
மாசுணம் ஊருமே;
தக்க பூ, மனைச் சுற்ற, கருளொடே, தாரம், உய்த்தது,
பாணற்கு, அருளொடே;
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய
தொண்டர்க்கு அணியையே;
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே; ஆலவாய், அரனார்
உமையோடுமே. 6 |
|
உரை
|
|
|
|
|
4041. |
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே; வெங்கண்
மாசுணம்,
கையது, குட்டியே;
ஐயனே! அனல் ஆடிய மெய்யனே! அன்பினால்
நினைவார்க்கு அருள் மெய்யனே!
வையம் உய்ய அன்று உண்டது காளமே; வள்ளல் கையது
மேவு கங்காளமே;
ஐயம் ஏற்பது உரைப்பது வீண், ஐயே! ஆலவாய் அரன்
கையது வீணையே. 7 |
|
உரை
|
|
|
|
|
4042. |
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே,
தொக்க தேவர்
செருக்கை மயக்கியே,
வாள் அரக்கன் நிலத்துக் களித்துமே, வந்து அ(ம்)மால்வரை
கண்டு உகளித்துமே,
நீள்பொருப்பை எடுத்த உன்மத்தனே, நின் விரல்-தலையால்
மதம் மத்தனே!
ஆளும் ஆதி முறித்தது மெய்கொலோ? ஆலவாய் அரன்
உய்த்ததும் மெய்கொலோ? 8 |
|
உரை
|
|
|
|
|
4043. |
பங்கயத்து உள நான்முகன், மாலொடே, பாதம்
நீள் முடி
நேடிட, மாலொடே,
துங்க நல்-தழலின் உருஆயுமே; தூய பாடல் பயின்றது,
வாயுமே;
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு,
உரைசெய்வது பிச்சு ஐயே!
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே; ஆலவாய், அரனாரது
இடக் கையே. 9 |
|
உரை
|
|
|
|
|
4044. |
தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர்
நாள்தொறும்
சேர்வது கானையே;
கோரம் அட்டது புண்டரிகத்தையே; கொண்ட, நீள் கழல்
புண்டரிகத்தையே;
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே; நீள்சடைத்
திகழ்கின்றது நாகமே;
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே; ஆலவாய், அரனார்
இடம் என்பதே. 10 |
|
உரை
|
|
|
|
|
4045. |
ஈன ஞானிகள் தம்மொடு விரகனே! ஏறு பல்பொருள்
முத்தமிழ் விரகனே,
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய
சம்பந்தனே!
ஆன வானவர் வாயின் உளத்தனே! அன்பர் ஆனவர்
வாயினுள் அத்தனே!
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு, இவை
நற்று அமிழ் பத்துமே. 11 |
|
உரை
|
|
|
|