தொடக்கம் |
117. சீகாழி - திருமாலைமாற்று - கௌசிகம்
|
|
|
4057. |
யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா,
யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா!
காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா! 1 |
|
உரை
|
|
|
|
|
4058. |
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா,
யாகா! யாழீ! காயா! காதா! யார் ஆர் ஆ தாய் ஆயாய்!
ஆயா! தார் ஆர் ஆயா! தாக ஆயா! காழீயா! கா, யா! 2 |
|
உரை
|
|
|
|
|
4059. |
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா,
தாவா மூவா தாசா! காழீ நாதா! நீ யாமா! மா!
மா மா யாநீ! தான ஆழீ! காசா! தா! வா! மூ வாதா! 3 |
|
உரை
|
|
|
|
|
4060. |
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
நீவா வாயா! கா யாழீ! கா, வா, வான் நோ வாராமே!
மேரா, வான் நோவாவா! காழீயா! காயா! வா வா, நீ! 4 |
|
உரை
|
|
|
|
|
4061. |
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா,
யா காலா! மேயா! காழீயா! மேதாவீ! தாய், ஆவீ!
வீயாதா! வீ தாம் மே யாழீ! கா, யாம் மேல் ஆகு
ஆயா! 5 |
|
உரை
|
|
|
|
|
4062. |
மேலாபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே,
மேலே போகாமே, தேழீ, காலாலே கால் ஆனாயே!
ஏல் நால் ஆகி ஆல் ஏலா! காழீ தே! மேகா!
போலேமே? 6 |
|
உரை
|
|
|
|
|
4063. |
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ,
நீயா மானீ! ஏயா மாதா! ஏழீ! கா,நீதானே!
நே தாநீ! காழீ வேதா! மாயாயே நீ, மாய் ஆநீ? 7 |
|
உரை
|
|
|
|
|
4064. |
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே,
நே(அ)ணவர் ஆ விழ யா (ஆ)சை இழியே! வேக
(அ)தள் ஏரி! அளாய உழி கா!
காழிஉளாய்! அரு இளவு ஏது அ(ஃ)கவே; ஏழ் இசை
யாழ இராவணனே. 8 |
|
உரை
|
|
|
|
|
4065. |
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா,
காலே மேலே காண் நீ காழீ! காலே! மாலே! மேபூ
பூமேல் ஏ(ய்), மாலே, காழீ! காண்! ஈ, காலே! மேலே
கா! 9 |
|
உரை
|
|
|
|
|
4066. |
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணே நினையே யேயொழிகாவண மேயுரிவே.
வேரியும் ஏண் நவ காழியொயே! ஏனை நீள் நேம் அடு
அள் ஓகரதே;
தேர(ர்)களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி! கா வணமே
உரிவே. 10 |
|
உரை
|
|
|
|
|
4067. |
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே,
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி! தாய் ஏல் நன் நீயே;
நன் நீள்! ஆய் உழி கா!
காழி உளான் இன் நையே நினையே, தாழ் இசையா, தமிழ்
ஆகரனே. 11 |
|
உரை
|
|
|
|