தொடக்கம் |
119. திருவீழிமிழலை - புறநீர்மை
|
|
|
4079. |
“புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு
சாந்தம்
பொடி-நீறு;
கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம்
செய் கூத்து உடையோன்-
அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க,
முள்-தாழைகள் ஆனை
வெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான்”
என, வினை கெடுமே. 1 |
|
உரை
|
|
|
|
|
4080. |
“இசைந்த ஆறு அடியார் இடு துவல், வானோர்
இழுகு
சந்தனத்து இளங் கமலப்
பசும்பொன் வாசிகைமேல் பரப்புவாய்; கரப்பாய், பத்தி
செய்யாதவர் பக்கல்;
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து
அரிந்து எடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான்!”
என,
வினை கெடுமே. 2 |
|
உரை
|
|
|
|
|
4081. |
“நிருத்தன், ஆறு அங்கன், நீற்றன், நால்மறையன்,
நீலம்
ஆர் மிடற்றன், நெற்றிக்கண்
ஒருத்தன், மற்று எல்லா உயிர்கட்கும் உயிர் ஆய் உளன்,
இலன், கேடு இலி, உமைகோன்-
திருத்தம் ஆய் நாளும் ஆடு நீர்ப் பொய்கை, சிறியவர்
அறிவினின் மிக்க
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான்”
என, வினை கெடுமே. 3 |
|
உரை
|
|
|
|
|
4082. |
“தாங்க(அ)ருங் காலம் தவிர வந்து இருவர்
தம்மொடும்
கூடினார் அங்கம்
பாங்கினால்-தரித்துப் பண்டு போல் எல்லாம் பண்ணிய
கண்நுதல் பரமர்
தேம் கொள் பூங் கமுகு, தெங்கு, இளங் கொடி, மா,
செண்பகம், வண் பலா, இலுப்பை,
வேங்கை, பூ மகிழால், வெயில் புகா வீழிமிழலையான்”
என, வினை கெடுமே. 4 |
|
உரை
|
|
|
|
|
4083. |
“கூசு மா மயானம் கோயில் வாயில்கண் குடவயிற்றன
சிலபூதம்,
பூசு மா சாந்தம் பூதி, மெல்லோதி பாதி, நன் பொங்கு
அரவு அரையோன்-
வாசம் ஆம் புன்னை, மௌவல், செங்கழுநீர், மலர்
அணைந்து எழுந்த வான் தென்றல்
வீசு மாம்பொழில் தேன் துவலை சேர்-வீழிமிழலையான்”
என, வினை கெடுமே. 5 |
|
உரை
|
|
|
|
|
4084. |
“பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர்,
பங்கயத்து அயனும்
ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன்
அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான்” என,
வினை கெடுமே. 6 |
|
உரை
|
|
|
|
|
4085. |
‘“தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த
சக்கரம்
எனக்கு அருள்!” என்று
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன்,
பிறை அணி சடையன்-
நின்ற நாள் காலை, இருந்த நாள் மாலை, கிடந்த
மண்மேல் வரு கலியை
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான்’ என,
வினை கெடுமே. 7 |
|
உரை
|
|
|
|
|
4086. |
“கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த
கரம் உரம்
சிரம் நெரிந்து அலற,
அடர்த்தது ஓர்விரலால், அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன்,
தட மிகு நெடுவாள்
படித்த நால்மறை கேட்டு இருந்த பைங்கிளிகள் பதங்களை
ஓத, பாடு இருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான்” என,
வினை கெடுமே. 8 |
|
உரை
|
|
|
|
|
4087. |
“அளவு இடல் உற்ற அயனொடு மாலும் அண்டம்
மண்
கிண்டியும் காணா
முளை எரி ஆய மூர்த்தியை, தீர்த்தம் முக்கண் எம்
முதல்வனை, முத்தை,
தளை அவிழ் கமலத்தவிசின் மேல் அனனம் தன்
இளம்பெடையோடும் புல்கி,
விளை கதிர்க்கவரி வீச, வீற்றிருக்கும் மிழலையான்” என,
வினை கெடுமே. 9 |
|
உரை
|
|
|
|
|
4088. |
“கஞ்சிப் போது உடையார், கையில்
கோசாரக் கலதிகள்,
கட்டுரை விட்டு
அஞ்சித் தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு
அமரர்க்கு அமுது அருளி
இஞ்சிக்கே கதலிக்கனி விழ, கமுகின் குலையொடும் பழம்
விழ, தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான்” என,
வினை கெடுமே. 10 |
|
உரை
|
|
|
|
|
4089. |
வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழிமிழலையுள்,
விண்
இழிவிமானத்து
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானை,
தோய்ந்த நீர்த் தோணிபுரத்து உறை மறையோன்-தூ மொழி
ஞானசம்பந்தன்-
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே.
11 |
|
உரை
|
|
|
|