120. திருஆலவாய் - புறநீர்மை
 
4090. மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக்
                                                    கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும்
                                                                    பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும்
                                   பொருள்களும் அருள
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும்
                                                          இதுவே.      1
உரை
   
4091. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன்,
                                      வெள்ளைநீறு அணியும்
கொற்றவன்தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று
                                                            ஏத்தும்
ஒற்றை வெள்விடையன், உம்பரார்தலைவன், உலகினில்
                                           இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன், உறைகின்ற ஆலவாய் ஆவதும்
                                                         இதுவே.      2
உரை
   
4092. செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன்
                                   திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய,
                                        பார் இடை நிலவும்
சந்தம் ஆர் தரளம், பாம்பு, நீர், மத்தம், தண் எருக்கம்மலர்,
                                                       வன்னி,
அந்தி வான்மதி, சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய்
                                             ஆவதும் இதுவே.      3
உரை
   
4093. கணங்கள் ஆய் வரினும், தமியராய் வரினும், அடியவர்
                                         தங்களைக் கண்டால்,
குணம்கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ்
                                                  மணிக் கோயில்
மணம் கமழ் கொன்றை, வாள் அரா, மதியம், வன்னி,
                                          வண் கூவிளமாலை,
அணங்கு, வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய்
                                              ஆவதும் இதுவே.      4
உரை
   
4094. செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல்
                                                              செல்வி,
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து
                                                      இனிது ஏத்த,
வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரி கதிர்
                                            மழு உடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும்
                                                          இதுவே.      5
உரை
   
4095. நலம் இலர் ஆக, நலம் அது உண்டு ஆக, நாடவர் நாடு
                                                    அறிகின்ற
குலம் இலர் ஆக, குலம் அது உண்டு ஆக, தவம் பணி
                                               குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன், மூஇலைவேலன், கரிஉரி மூடிய
                                                       கண்டன்,
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல், ஆலவாய்
                                              ஆவதும் இதுவே.      6
உரை
   
4096. முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன்
                                       மார்பினில் முயங்க,
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய,
                                                        நின்ற
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம்
                                                அடுத்தால் போல்,
அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய்
                                             ஆவதும் இதுவே.      7
உரை
   
4097. நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சு எழுத்து ஓதி, நல்லராய்
                                                 நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்-தொழுது எழு குலச்சிறை
                                                           போற்ற,
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண்தோள் இருபதும்
                                                      நெரிதர ஊன்றி,
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும்
                                                          இதுவே.      8
உரை
   
4098. மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்
                                                  தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால்
                                                  பணி செய்து பரவ,
விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம்
                                                  வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய்
                                              ஆவதும் இதுவே.      9
உரை
   
4099. தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன்
                                          குணத்தினைக் குலாவக்
கண்டு, நாள்தோறும் இன்பு உறுகின்ற குலச்சிறை கருதி
                                                        நின்று ஏத்த,
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண்
                                            நெறி இடை வாரா
அண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய்
                                            ஆவதும் இதுவே.      10
உரை
   
4100. பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர்
                                                              பணியும்
அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு
                                              அவை போற்றி,
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ்
                                               இவை கொண்டு
இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர்,
                                                          இனிதே.      11
உரை