தொடக்கம் |
121. திருப்பந்தணைநல்லூர் - புறநீர்மை
|
|
|
4101. |
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;
இவை சொல்லி
லகு எழுந்து ஏத்த,
கடறினார் ஆவர்; காற்று உளார் ஆவர்; காதலித்து உறைதரு
கோயில்
கொடிறனார்; யாதும் குறைவு இலார்; தாம் போய்க் கோவணம்
கொண்டு கூத்து ஆடும்
படிறனார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
1 |
|
உரை
|
|
|
|
|
4102. |
“கழி உளார்” எனவும், “கடல் உளார்” எனவும்,
“காட்டு
உளார்:, நாட்டு உளார்” எனவும்,
“வழி உளார்” எனவும், “மலை உளார்” எனவும், “மண்
உளார்”, “விண் உளார்” எனவும்,
“சுழி உளார்” எனவும், சுவடு தாம் அறியார், தொண்டர்
வாய் வந்தன சொல்லும்
பழி உளார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே. 2 |
|
உரை
|
|
|
|
|
4103. |
“காட்டினார்” எனவும், “நாட்டினார்” எனவும்,
“கடுந் தொழில்
காலனைக் காலால்
வீட்டினார்” எனவும், சாந்த வெண்நீறு பூசி, ஓர் வெண்மதி
சடைமேல்
சூட்டினார்” எனவும், சுவடு தாம் அறியார், சொல் உள
சொல்லும் நால்வேதப்-
பாட்டினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
3 |
|
உரை
|
|
|
|
|
4104. |
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த,
மொய்த்த
பல்கணங்களின் துயர் கண்டு
உருகினார் ஆகி, உறுதி போந்து, உள்ளம் ஒண்மையால்,
ஒளி திகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த, கடலுள் நஞ்சு
அமுதமா வாங்கிப்
பருகினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
4 |
|
உரை
|
|
|
|
|
4105. |
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து
பொறி கிளர்
பூணநூல் புரள,
மின்னின் ஆர் உருவின், மிளிர்வது ஓர் அரவம், மேவு
வெண்நீறு மெய் பூசி,
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி, தொன்மை
ஆர் தோற்றமும் கேடும்
பன்னினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
5 |
|
உரை
|
|
|
|
|
4106. |
“ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க!”
எனவும்
“உமையவள் கணவன் வாழ்க!” எனவும்,
அண்பினார், பிரியார், அல்லும் நன்பகலும், அடியவர் அடி
இணை
தொழவே,
நண்பினார் எல்லாம், “நல்லர்!” என்று ஏத்த, அல்லவர்,
“தீயர்!” என்று ஏத்தும்
பண்பினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
6 |
|
உரை
|
|
|
|
|
4107. |
எற்றினார், ஏதும் இடைகொள்வார் இல்லை,
இருநிலம் வான்
உலகு எல்லை
தெற்றினார் தங்கள் காரணம் ஆகச் செரு மலைந்து, அடி
இணை சேர்வான்,
முற்றினார் வாழும் மும்மதில் வேவ, மூஇலைச்சுலமும் மழுவும்
பற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
7 |
|
உரை
|
|
|
|
|
4108. |
ஒலிசெய்த குழலின் முழவம் அது இயம்ப, ஓசையால்
ஆடல்
அறாத
கலி செய்த பூதம் கையினால் இடவே, காலினால் பாய்தலும்,
அரக்கன்
வலி கொள்வர்; புலியின் உரி கொள்வர்; ஏனை வாழ்வு
நன்றானும் ஓர் தலையில்
பலி கொள்வர்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே. 8 |
|
உரை
|
|
|
|
|
4109. |
சேற்றின் ஆர் பொய்கைத் தாமரையானும்,
செங்கண்மால்,
இவர் இருகூறாத்
தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும்
பெருமையும்
தம்மில்
சாற்றினார், சாற்றி, “ஆற்றலோம்” என்ன, சரண் கொடுத்து,
அவர் செய்த பாவம்
பாற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
9 |
|
உரை
|
|
|
|
|
4110. |
கல் இசை பூணக் கலை ஒலி ஓவாக் கழுமல முதுபதி
தன்னில்
நல் இசையாளன், புல் இசை கேளா நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பல் இசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல் இசைப்பாடல் பத்தும் வல்லவர் மேல், தொல்வினை
சூழகிலாவே. 11 |
|
உரை
|
|
|
|