தொடக்கம் |
|
|
21 | மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி, போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன், யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது, காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன். கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன். |
|
உரை
|
|
|
|
|
22 | போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி, “வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன், ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது, கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|
|
23 | எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி, முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன், அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது, வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|
|
24 | பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி, துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன், அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது, சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|
|
25 | ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி, காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன், ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது, பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|
|
26 | தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி, உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன், அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது, வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|
|
27 | கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி, வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன், அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது, இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|
|
28 | விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி, பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன். அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது, கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|
|
29 | முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி, பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன், அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது, நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|
|
30 | திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி, “எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன், அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது, பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்; கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|
|
31 | வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி, களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன், அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது, இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! |
|
உரை
|
|
|
|