தொடக்கம் |
|
|
32 | பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும், கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும், ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும், ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|
|
33 | நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு செய்வானும், விரதம் கொண்டு ஆட வல்லானும், விச்சு இன்றி நாறு செய்வானும், முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட, முன் பணிந்து அன்பர்கள் ஏத்த, அரவு அரைச் சாத்தி நின்றானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|
|
34 | நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும், ஏறு உகந்து ஏற வல்லானும், எரி புரை மேனியினானும், நாறு கரந்தையினானும், நால்மறைக் கண்டத்தினானும், ஆறு சடைக் கரந்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|
|
35 | கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும், செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழக் கண் சிவந்தானும், வம்பு நல் கொன்றையினானும், வாள் கண்ணி வாட்டம் அது எய்த அம்பர ஈர் உரியானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|
|
36 | ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும், தாழ் இளஞ் செஞ்சடையானும், தண்ணம் ஆர் திண் கொடியானும், தோழியர் தூது இடையாட, தொழுது அடியார்கள் வணங்க, ஆழி வளைக் கையினானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|
|
37 | ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும், சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும், வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும், ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|
|
38 | தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்குத் தோன்றி அருள வல்லானும்; கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கன்ற்ற நின்றானும்; குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச் சடை கரந்தானும்; அழல், கம், கை ஏந்த வல்லானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|
|
39 | ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும், ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும், ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும், ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|
|
40 | வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடர ஓடு அரங்கு ஆக வைத்தானும், ஓங்கி ஒர் ஊழி உள்ளானும், காடு அரங்கா மகிழ்ந்தானும், காரிகையார்கள் மனத்து ஆடு அரங்கத்து இடையானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|
|
41 | பை அம் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும், கை அஞ்சு -நான்கு உடையானைக் கால்விரலால் அடர்த்தானும் பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும் ஐ-அஞ்சின் அப் புறத்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே. |
|
உரை
|
|
|
|