4.12 திருப்பழனம்
பழந்தக்கராகம்
114சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே-
பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்,
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப்
பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ?
உரை
   
115கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள
பண்டரங்க வேடத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
வண்டு உலா(அ)ம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம்
கொண்ட(ந்)நாள் தான் அறிவான், குறிக் கொள்ளா தொழிவானோ?
உரை
   
116மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத முகத்த
பனைக்கை மா உரி போர்த்தான், பலர் பாடும் பழனத்தான்,
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ, நிகழ் வண்டே?-
சுனைக்கு வளைமலர்க்கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வார்
உரை
   
117புதியை ஆய் இனியை ஆம் பூந் தென்றல்!” புறங்காடு
பதி ஆவது இது” என்று பலர் பாடும் பழனத்தான்,
மதியா தார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை
விதியாளன், என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ?
உரை
   
118மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா தீர்த்த வேதியர்க்கும்,
விண் பொருந்து தேவர்க்கும், வீடு பேறு ஆய் நின்றானை;
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை, என்
கண் பொருந்தும் போழ் தத்தும், கைவிட நான் கடவேனோ?
உரை
   
119பொங்கு ஓதமால் கடலில் புறம் புறம் போய் இரை தேரும்
செங்கால் வெண் மட நாராய்! செயல் படுவது அறியேன், நான்!
அம் கோல வளை கவர்ந்தான், அணி பொழில் சூழ் பழனத்தான்,
தம் கோல நறுங்கொன்றைத்தார் அருளா தொழி வானோ?
உரை
   
120துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும் மடநாராய்!
பணை ஆரவாரத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி செய்த
இணை ஆர மார்பன்(ன்) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ?
உரை
   
121கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து ஓடும் காவிரிப்பூம்-
பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்து ஆடும் பழனத்தான்,
கோவைவாய் மலைமகள் கோன், கொல் ஏற்றின் கொடி ஆடைப்
பூவைகாள்! மழலைகாள்! போகாத பொழுது உளதே?
உரை
   
122“புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான் மணி நாகப்-
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ரூவார் வினை தீர்க்கும்” என்று உரைப்பர், உலகு எல்லாம்;
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ?
உரை
   
123வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்,
பஞ்சிக்கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய்!-கோடு இயையே!
உரை