4.16 திருப்புகலூர்
இந்தளம்
156செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.
உரை
   
157மேக நல் ஊர்தியர், மின் போல் மிளிர்சடைப்
பாகமதி நுதலாளை ஒர் பாகத்தர்,
நாக வளையினர், நாக உடையினர்
போகர்-புகலூர்ப் புரிசடையாரே.
உரை
   
158பெருந் தாழ் சடை முடி மேல் பிறை சூடி,
கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து,
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும்
பொருந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
உரை
   
159அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர், நாகத்தர்
நக்கு ஆர் இளமதிக் கண்ணியர், நாள்தொறும்
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர் தொறும்
புக்கார்-புகலூர்ப் புரிசடையாரே.
உரை
   
160ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல்
பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக்
கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி
போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
உரை
   
161தூ மன் சுறவம் துதைந்த கொடி உடைக்
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர்,
சேம நெறியினர்; சீரை உடையவர்
பூ மன் புகலூர்ப் புரிசடையாரே.
உரை
   
162உதைத்தார், மறலி உருள ஓர் காலால்;
சிதைத்தார், திகழ் தக்கன் செய்த நல் வேள்வி;
பதைத்தார் சிரம் கரம் கொண்டு, வெய்யோன் கண்
புதைத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
உரை
   
163கரிந்தார் தலையர்; கடி மதில் மூன்றும்,
தெரிந்தார், கண்கள், செழுந் தழல் உண்ண;
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை
புரிந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
உரை
   
164ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ,
நீண்டார், நெடுந் தடுமாற்ற நிலை அஞ்ச;
மாண்டார் தம் என்பும் மலர்க் கொன்றை மாலையும்
பூண்டார்-புகலூர்ப் புரிசடையாரே.
உரை
   
165கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி
இறுத்தார், இலங்கையர் கோன் முடிபத்தும்,
அறுத்தார், புலன் ஐந்தும்; ஆயிழை பாகம்
பொறுத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
உரை