4.17 திருஆரூர் அரநெறி
இந்தளம்
166எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை;
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்;
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.
உரை
   
167வீரமும் பூண்பர்; விசயனொடு ஆயது ஒர்
தாரமும் பூண்பர்; தமக்கு அன்புபட்டவர்
பாரமும் பூண்பர்; நன் பைங் கண் மிளிர் அரவு-
ஆரமும் பூண்பர்-அரநெறியாரே.
உரை
   
168தஞ்ச வண்ணத்தர்; சடையினர்; தாமும் ஒர்
வஞ்ச வண்ணத்தர்; வண்டு ஆர் குழலாளொடும்
துஞ்ச வண்ணத்தர்; துஞ்சாத கண்ணார் தொழும்
அஞ்ச வண்ணத்தர்-அரநெறியாரே.
உரை
   
169விழித்தனர், காமனை வீழ்தர; விண் நின்று
இழித்தனர், கங்கையை; ஏத்தினர் பாவம்
கழித்தனர்; கல் சூழ் கடி அரண் மூன்றும்
அழித்தனர்-ஆரூர் அரநெறியாரே.
உரை
   
170துற்றவர், வெண் தலையில்; சுருள் கோவணம்
தற்றவர்; தம் வினை ஆன எலாம் அற
அற்றவர்; ஆரூர் அரநெறி கைதொழ
உற்றவர் தாம் ஒளி பெற்றனர் தாமே.
உரை
   
171கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி
நீடு அரவத்தர்; முன் மாலை இடை இருள்
பாடு அரவத்தர்; பணம் அஞ்சுபை விரித்து
ஆடு அரவத்தர் -அரநெறியாரே.
உரை
   
172கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்;
பாட வல்லார்; பயின்று அந்தியும் சந்தியும்
ஆட வல்லார்; திரு ஆரூர் அரநெறி
நாட வல்லார்; வினை வீட வல்லாரே.
உரை
   
173பாலை நகு பனி வெண்மதி, பைங் கொன்றை,
மாலையும் கண்ணியும் ஆவன; சேவடி
காலையும் மாலையும் கை தொழுவார் மனம்
ஆலயம்-ஆரூர் அரநெறியார்க்கே.
உரை
   
174முடி வண்ணம் வான மின் வண்ணம்; தம் மார்பின்
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்;
படி வண்ணம் பாற்கடல் வண்ணம்; செஞ்ஞாயிறு
அடி வண்ணம்-ஆரூர் அரநெறியார்க்கே.
உரை
   
175பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன் அருள் சூடி எள் காதும் இராப்பகல்,
மன்னவர் கின்னரர் வானவர் தாம், தொழும்
அன்னவர்-ஆரூர் அரநெறியாரே.
உரை
   
176பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்ட
மருள் மன்னனை எற்றி, வாள் உடன் ஈந்து,
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட
அருள் மன்னர்-ஆரூர் அரநெறியாரே.
உரை