4.18 பொது
விடம் தீர்த்த திருப்பதிகம்
இந்தளம்
177ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை;
ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்;
ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது;
ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.
உரை
   
178இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு பாதம்;
இரண்டு கொல் ஆம் இலங்கும் குழை; பெண், ஆண்,
இரண்டு கொல் ஆம் உருவம்; சிறு மான், மழு,
இரண்டு கொல் ஆம் அவர் ஏந்தின தாமே.
உரை
   
179மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன;
மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை;
மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்;
மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே.
உரை
   
180நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன;
நாலு கொல் ஆம் சனனம் முதல்- தோற்றமும்;
நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொல் ஆம் மறை பாடினதாமே.
உரை
   
181அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்;
அஞ்சு கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன;
அஞ்சு கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை;
அஞ்சு கொல் ஆம் அவர் ஆடின தாமே.
உரை
   
182ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன;
ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்;
ஆறு கொல் ஆம் தார்மிசை வண்டின் கால்;
ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே.
உரை
   
183ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன;
ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்;
ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.
உரை
   
184எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்;
எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்;
எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன;
எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே.
உரை
   
185ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன;
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல்-இழை;
ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை;
ஒன்பது போல் அவர் பார் இடம்தானே.
உரை
   
186பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்;
பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன;
பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை;
பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே.
உரை