தொடக்கம் |
|
|
198 | காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய்; கழல் அடி பூண்டு கொண்டொழிந்தேன்; புறம் போயினால் அறையோ?- ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகைமேல் எழு கொடி வான் இள (ம்) மதி தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
199 | கடம் பட(ந்) நடம் ஆடினாய்; களைகண் நினைக்கு ஒரு காதல் செய்து, அடி ஒடுங்கி வந்து அடைந்தேன்; ஒழிப்பாய், பிழைப்ப எல்லாம்!- முடங்கு இறா, முது நீர் மலங்கு, இள வாளை, செங்கயல், சேல் வரால், களிறு, அடைந்த தண் கழனி, அணி ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
200 | அரு மணித் தடம் பூண் முலை அரம்பையரொடு அருளிப்பாடியர் உரிமையில்- தொழுவார், உருத்திர பல் கணத்தார் விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
201 | பூங்கழல் தொழுதும் பரவியும், புண்ணியா! புனிதா! உன் பொன் கழல் ஈங்கு இருக்கப் பெற்றேன்; என்ன குறை உடையேன்?- ஓங்கு தெங்கு, இலை ஆர் கமுகு, இள வாழை, மாவொடு, மாதுளம், பல- தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
202 | நீறு சேர் செழு மார்பினாய்; நிரம்பா மதியொடு நீள்சடை இடை ஆறு பாய வைத்தாய்; அடியே அடைந்தொழிந்தேன் ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற, விண்ட மலர் இதழ் வழி தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
203 | “அளித்து வந்து அடி கைதொழுமவர்மேல் வினை கெடும்” என்று இ(வ்) வையகம் களித்து வந்து உடனே கலந்து ஆடக் காதல் ஆய்க் குளித்தும், மூழ்கியும், தூவியும், குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புகத் தெளிக்கும் தீர்த்தம் அறாத் திரு ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
204 | திரியும் மூ எயில் தீ எழச் சிலை வாங்கி நின்றவனே! என் சிந்தையுள பிரியும் ஆறு எங்ஙனே? பிழைத்தேயும் போகல் ஒட்டேன் பெரிய செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியம் என்று இவை அகத்து அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
205 | பிறத்தலும், பிறந்தால் பிணிப் பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று இறக்கும் ஆறு உளதே; இழித்தேன், பிறப்பினை நான்; அறத்தையே புரிந்த மனத்தனாய், ஆர்வச்செற்றக்குரோதம் நீக்கி, உன் திறத்தனாயொழிந்தேன் -திரு ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
206 | முளைத்த வெண்பிறை மொய் சடை உடையாய்! எப்போதும் என் நெஞ்சு இடம் கொள வளைத்துக் கொண்டிருந்தேன்; வலி செய்து போகல் ஒட்டேன் அளைப் பிரிந்த அலவன் போய்ப் புகு தந்த காலமும் கண்டு தன் பெடை திளைக்கும் தண் கழனித் திரு ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
207 | நாடினார், -கமலம்மலர் அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன், நாடிக் காணமாட்டாத் தழல் ஆய நம்பானை, பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு தேடிக் கண்டு கொண்டேன்; திரு ஆரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|