தொடக்கம் |
|
|
4.32 திருப்பயற்றூர் திருநேரிசை |
314 | உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட; விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித் தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும் சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
315 | உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம் வைத்தவர்; ஊழி ஊழி பவர்ந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றி, கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி, சிவந்திட்ட கண்ணர் போலும்-திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
316 | “நங்களுக்கு அருளது” என்று நால்மறை ஓதுவார்கள் தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்; தழலன்; தன்னை; “எங்களுக்கு அருள்செய்!” என்ன நின்றவன்; நாகம் அஞ்சும் திங்களுக்கு அருளிச் செய்தார்-திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
317 | பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை ஆட வைத்தார் சாத்தனை மகனா வைத்தார்; சாமுண்டி சாம வேதம் கூத்தொடும் பாட வைத்தார்; கோள் அரா, மதியம், நல்ல தீர்த்தமும், சடைமேல் வைத்தார்-திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
318 | மூவகை மூவர்போலும்; முற்று மா நெற்றிக்கண்ணர் நா வகை நாவர்போலும்; நால்மறை ஞானம் எல்லாம் ஆ வகை ஆவர்போலும்; ஆதிரைநாளர் போலும்; தேவர்கள் தேவர் போலும்-திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
319 | ஞாயிறுஆய், நமனும் ஆகி, வருணனாய், சோமன் ஆகி, தீ அறா நிருதி வாயுத் திப்பி(ய) ஈசானன் ஆகி, பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன், எந்தை பெம்மான், தீ அறாக் கையர் போலும்-திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
320 | ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம் ஆய், பெருக்கம் ஆகி, பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய், பிரமன் ஆகி, காவி அம் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார்- திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
321 | தந்தையாய், தாயும் ஆகி, தரணி ஆய், தரணி உள்ளார்க்கு எந்தையும் என்ன நின்ற ஏழ் உலகு உடனும் ஆகி, “எந்தை! எம்பிரானே!” என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும் சிந்தையும் சிவமும் ஆவார்- திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
322 | புலன்களைப் போக நீக்கி, புந்தியை ஒருங்க வைத்து(வ்) இனங்களைப் போக நின்று, இரண்டையும் நீக்கி, ஒன்று ஆய் மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகிச் சினங்களைக் களைவர் போலும்-திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
323 | மூர்த்தி தன் மலையின் மீது போகாதா, முனிந்து நோக்கி, பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்து, உடன் மலையைப் பற்றி, ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத் தேத்தெத்தா என்னக் கேட்டார்-திருப் பயற்றூரனாரே. |
|
உரை
|
|
|
|