தொடக்கம் |
|
|
4.33 திருமறைக்காடு திருநேரிசை |
324 | இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்; சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
325 | தேயன நாடர் ஆகித் தேவர்கள்தேவர் போலும்; பாயன நாடு அறுக்கும் பத்தர்கள், பணிய வம்மின்! காயன நாடு கண்டம் கதன் உளார்; காளகண்டர் மாயன நாடர் போலும்-மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
326 | அறுமை இவ் உலகு தன்னை ஆம் எனக் கருதி நின்று, வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே; சிறுமதி, அரவு, கொன்றை திகழ் தரு சடையுள் வைத்து மறுமையும் இம்மை ஆவார்-மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
327 | கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல் ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி, மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
328 | விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி ஓதப் பண்ணினார்; கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக் கண்ணினார்; கண்ணினுள்ளே சோதி ஆய் நின்ற எந்தை- மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
329 | அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார் தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார் திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
330 | கீதராய், கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார் வேதராய், வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் ஏதராய், நட்டம் ஆடி, இட்டம் ஆய்க் கங்கையோடு மாதை ஓர்பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
331 | கனத்தின் ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும் சினத்தினுள் சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார் போலும்; தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார்-மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
332 | தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று இசைப்பார் வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்! காசினை, கனலை, என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு மாசினைத் தீர்ப்பர்போலும்-மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
333 | பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில், பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே; துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும், தோகை அஞ்ச, மணி முடிப்பத்து இறுத்தார்-மா மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|