தொடக்கம் |
|
|
4.34 திருமறைக்காடு திருநேரிசை |
334 | தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை, பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து “காரிகை, அஞ்சல்!” என்பார்-கலி மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
335 | முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர் கோனை நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாள்மதி வைத்த எந்தை; அக்கு, அரவு, ஆமை, பூண்ட அழகனார், கருத்தினாலே;- தெக்கு நீர்த் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
336 | மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி, “அகப்படுத்து!” என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன் உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே. |
|
உரை
|
|
|
|
|
337 | அந்தரம் தேர் கடாவி, “ஆர் இவன்?” என்று சொல்லி, உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன் பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச் சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
338 | தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி, கடுக்க ஓர் தேர் கடாவி, “கை இருபதுகளாலும் எடுப்பன், நான்; என்ன பண்டம்!” என்று எடுத்தானை ஏங்க அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே. |
|
உரை
|
|
|
|
|
339 | நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான், “கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன்” என்று; நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான் தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
340 | பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், “மா வலியன்” என்று பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக் கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்- முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே. |
|
உரை
|
|
|
|
|
341 | பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி, புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான், மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே! |
|
உரை
|
|
|
|
|
342 | நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி, நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்) ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே. |
|
உரை
|
|
|
|
|
343 | கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட, தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை, முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட, அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே. |
|
உரை
|
|
|
|