தொடக்கம் |
|
|
4.35 திருஇடைமருது திருநேரிசை |
344 | காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல் பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில் தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
345 | முந்தையார்; முந்தி உள்ளார்; மூவர்க்கும் முதல்வர் ஆனார் சந்தியார்; சந்தி உள்ளார்; தவநெறி தரித்து நின்றார் சிந்தையார்; சிந்தை உள்ளார்; சிவநெறி அனைத்தும் ஆனார் எந்தையார்; எம்பிரானார்-இடைமருது இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
346 | கார் உடைக் கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி ஆய போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர்-பொன்னித் தென்பால் ஏர் உடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
347 | விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் நான்கும், அங்கம், பண்ணினார்; பண்ணின் மிக்க பாடலார்; பாவம் தீர்க்கும் கண்ணினார்; கண்ணின் மிக்க நுதலினார்; காமற் காய்ந்த எண்ணினார்; எண்ணின் மிக்கார்- இடைமருது இடம்கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
348 | வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த, பூதங்கள் பாடி ஆடல் உடையவன்; புனிதன்; எந்தை; பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை- ஏதங்கள் தீர நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
349 | பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவும், சூழ, முறிதரு வன்னி கொன்றை, முதிர்சடை மூழ்க வைத்து, மறிதரு கங்கை தங்க வைத்தவர்-எத்திசையும் ஏறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
350 | படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல் அரவினோடு சுடர் ஒளி மதியம் வைத்துத் தூ ஒளி தோன்றும் எந்தை; அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர்; அன்பர் தங்கள் இடர் அவை கெடவும் நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
351 | கமழ்தரு சடையினுள்ளால் கடும் புனல் அரவினோடும் தவழ்தரு மதியம் வைத்து, தன் அடி பலரும் ஏத்த, மழு அது வலங்கை ஏந்தி, மாது ஒருபாகம் ஆகி, எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
352 | பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம், மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டாா இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
353 | மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத் தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி, சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்- இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|