தொடக்கம் |
|
|
4.39 திருஐயாறு திருநேரிசை |
384 | குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத் துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே! தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே. |
|
உரை
|
|
|
|
|
385 | பீலி கை இடுக்கி, நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி, வாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னே! வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
386 | தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி, ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே! மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே. |
|
உரை
|
|
|
|
|
387 | பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்; தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
388 | கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி, வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே! மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
389 | துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்) உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி; நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே! |
|
உரை
|
|
|
|
|
390 | பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம் சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது; மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை! எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே! |
|
உரை
|
|
|
|
|
391 | மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,- எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!- தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக் கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே! |
|
உரை
|
|
|
|
|
392 | குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும், திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார் அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப் பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
393 | அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று, முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ, அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே. |
|
உரை
|
|
|
|