தொடக்கம் |
|
|
4.40 திருஐயாறு திருநேரிசை |
394 | தான் அலாது உலகம் இல்லை; சகம் அலாது அடிமை இல்லை; கான் அலாது ஆடல் இல்லை; கருதுவார் தங்களுக்கு வான் அலாது அருளும் இல்லை; வார் குழல் மங்கையோடும் ஆன் அலாது ஊர்வது இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
395 | ஆல் அலால் இருக்கை இல்லை; அருந்தவ முனிவர்க்கு அன்று நூல் அலால் நொடிவது இல்லை; நுண் பொருள் ஆய்ந்து கொண்டு மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க, வேலை ஆல் அலால் அமுதம் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
396 | நரி புரி சுடலை தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை; சுரி புரி குழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை; தெரி புரி சிந்தையார்க்குத் தெளிவு அலால் அருளும் இல்லை- அரி புரி மலர்கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
397 | தொண்டு அலால்-துணையும் இல்லை; தோல் அலாது உடையும் இல்லை; கண்டு அலாது அருளும் இல்லை; கலந்த பின் பிரிவது இல்லை- “பண்டை நால்மறைகள் காணாப் பரிசினன்” என்று என்று எண்ணி, அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
398 | எரி அலால் உருவம் இல்லை; ஏறு அலால் ஏறல் இல்லை; கரி அலால் போர்வை இல்லை; காண் தகு சோதியார்க்கு, பிரி இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்- அரி அலால்-தேவி இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
399 | என்பு அலால் கலனும் இல்லை; எருது அலால் ஊர்வது இல்லை; புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை; துன்பு இலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும் அன்பு அலால் பொருளும் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
400 | கீள் அலால் உடையும் இல்லை; கிளர் பொறி அரவம் பைம் பூண் தோள் அலால்-துணையும் இல்லை; தொத்து அலர்கின்ற வேனில் வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை; மீள ஆள் அலால் கைம்மாறு இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
401 | சகம் அலாது அடிமை இல்லை; தான் அலால்-துணையும் இல்லை; நகம் எலாம் தேயக் கையால் நாள் மலர் தொழுது தூவி, முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து, ஏத்தும் தொண்டர் அகம் அலால் கோயில் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
402 | உமை அலாது உருவம்- இல்லை; உலகு அலாது உடையது இல்லை- நமை எலாம் உடையர் ஆவர்; நன்மையே; தீமை இல்லை; கமை எலாம் உடையர் ஆகிக் கழல் அடி பரவும் தொண்டர்க்கு அமைவு இலா அருள் கொடுப்பார் -ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
403 | மலை அலால் இருக்கை இல்லை; மதித்திடா அரக்கன் தன்னைத் தலை அலால் நெரித்தது இல்லை; தடவரைக் கீழ் அடர்த்து; நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை- அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே. |
|
உரை
|
|
|
|