தொடக்கம் |
|
|
4.44 திருக்கச்சி ஏகம்பம் திருநேரிசை |
434 | நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ- கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை; செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே. |
|
உரை
|
|
|
|
|
435 | ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்; அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து; பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே! |
|
உரை
|
|
|
|
|
436 | மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார், மழு ஒன்று ஏந்திச் சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழச் செற்ற செல்வர், இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை, தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே! |
|
உரை
|
|
|
|
|
437 | பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்) ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை, வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே! |
|
உரை
|
|
|
|
|
438 | மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, கடை தொறும் பலி கொள்வார், தாம் எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை, கையினால் -தொழ வல்லார்க்குக் கடுவினை களையல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
439 | தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள் அரு வினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும் திரு வினை, திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல உரு வினை, உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.! |
|
உரை
|
|
|
|
|
440 | கொண்டது ஓர் கோலம் ஆகிக் கோலக்கா உடைய கூத்தன், உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான், எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னை, கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே. |
|
உரை
|
|
|
|
|
441 | படம் உடை அரவினோடு பனி மதி அதனைச் சூடி, கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச, அம்ம! இடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன் நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
442 | பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண் மார்பர் நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று, குன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர்; எம்மை இன் துயில் போது கண்டார்; இனியர்-ஏகம்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
443 | துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும் ஏத்த அருத்தியால் அன்பு செய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்து(வ்) எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே! |
|
உரை
|
|
|
|