4.46 திருஒற்றியூர்
திருநேரிசை
454ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து
காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்;
பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே!
உரை
   
455மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி,
சினம் எனும் சரங்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது,
மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!
உரை