தொடக்கம் |
|
|
4.56 திருஆவடுதுறை திருநேரிசை |
538 | மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்; பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்; காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்- ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
539 | மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர் போலும்; குடந்தையில் குழகர் போலும்; கொல் புலித் தோலர் போலும்; கடைந்த நஞ்சு உண்பர் போலும்; காலனைக் காய்வர் போலும்; அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
540 | உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு துணை ஆவர் போலும்; செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழச் செறுவர் போலும்; கற்றவர் பரவி ஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும் அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
541 | மழு அமர் கையர் போலும்; மாது அவள் பாகர் போலும்; எழு நுனை வேலர் போலும்; என்பு கொண்டு அணிவர் போலும்; தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம்பலவும் சொல்லி அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
542 | பொடி அணி மெய்யர் போலும்; பொங்கு வெண் நூலர் போலும்; கடியது ஓர் விடையர் போலும்; காமனைக் காய்வர் போலும்; வெடி படுதலையர் போலும்; வேட்கையால் பரவும் தொண்டர் அடிமையை அளப்பர்போலும் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
543 | வக்கரன் உயிரை வவ்வக் கண் மலர் கொண்டு போற்றச் சக்கரம் கொடுப்பர் போலும்; தானவர் தலைவர் போலும்; துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்; அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
544 | விடை தரு கொடியர் போலும்; வெண் புரி நூலர் போலும்; படை தரு மழுவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்; உடை தரு கீளர் போலும்; உலகமும் ஆவர் போலும் அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
545 | முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த; நந்தி, மாகாளர் என்பார், நடு உடையார்கள் நிற்ப; சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
546 | பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும், தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும், தீனரைத் தியக்கு அறுத்த திரு உரு உடையர் போலும்; ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
547 | பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்; ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்; கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே. |
|
உரை
|
|
|
|