தொடக்கம் |
|
|
4.59 திருஅவள் இவள் நல்லூர் திருநேரிசை |
568 | தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத் தேற்றுவான் சென்று சொல்ல, “சிக்கெனத் தவிரும்!” என்று, வீற்றினை உடையன் ஆகி வெடு வெடுத்து எடுத்தவன் தன் ஆற்றலை அழிக்க வல்லார்-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
569 | “வெம்பினார் அரக்கர் எல்லாம்; மிகச் சழக்கு ஆயிற்று” என்று, “செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும்!” என்ன, “நம்பினார்” என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி, அம்பினால் அழிய எய்தார்-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
570 | கீழ்ப்படக் கருதல் ஆமோ, கீர்த்திமை உள்ளது ஆகில்? “தோள் பெரு வலியினாலே தொலைப்பன், யான் மலையை” என்று வேள் பட வைத்த ஆறே விதிர் விதிர்த்து அரக்கன் வீழ்ந்து(வ்) ஆட்படக் கருதிப் புக்கார்-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
571 | நிலை வலம் வல்லன் அல்லன், நேர்மையை நினைய மாட்டான், சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத் தலை வலம் கருதிப் புக்குத் தாங்கினான் தன்னை, அன்று(வ்) அலை குலை ஆக்குவித்தார்-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
572 | தவ் வலி ஒன்றன் ஆகித் தனது ஒரு பெருமையாலே; “மெய்(வ்) வலி உடையன்” என்று மிகப் பெருந் தேரை ஊர்ந்து செவ் வலி கூர் விழி(ய்)யான் சிரமத்தான் எடுக்குற்றானை அவ் வலி தீர்க்க வல்லார்-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
573 | நன்மை தான் அறியமாட்டான், நடு இலா அரக்கர் கோமான் வன்மையே கருதிச் சென்று, வலி தனைச் செலுத்தல் உற்றுக் கன்மையால் மலையை ஓடி, கருதித் தான் எடுத்து, வாயால் “அம்மையோ!” என்ன வைத்தார்-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
574 | கதம் படப் போது வார்கள் போதும் அக் கருத்தினாலே “சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரும்!” என்று, மதம் படு மனத்தன் ஆகி, வண்மையான் மிக்கு நோக்க, அதம் பழத்து உருவு செய்தார்-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
575 | நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர் கோனை, “ஓடு, மிக்கு!” என்று சொல்லி, ஊன்றினான், உகிரினாலே; “பாடு மிக்கு உய்வன்” என்று பணிய, நல்-திறங்கள் காட்டி ஆடு மிக்கு அரவம் பூண்டார்-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
576 | ஏனம் ஆய்க் கிடந்த மாலும், எழில் தரு முளரியானும், ஞானம் தான் உடையர் ஆகி நன்மையை அறிய மாட்டார் சேனம் தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி ஆனந்த அருள்கள் செய்தார்-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
577 | ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன் தன்னைத் தாக்கினான், விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி; நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி ஆக்கினார், அமுதம் ஆக-அவளி வணல்லூராரே. |
|
உரை
|
|
|
|