தொடக்கம் |
|
|
4.61 திருஇராமேச்சுரம் திருநேரிசை |
588 | பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, தக்க வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு, மதியினால் மால் செய் கோயில் நேசம் மிக்கு அன்பினாலே நினைமின், நீர், நின்று நாளும்! தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுர(ம்)மே. |
|
உரை
|
|
|
|
|
589 | “முற்றின, நாள்கள்” என்று முடிப்பதே காரணம்(ம்) ஆய் உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர் தம்மைச் செற்ற மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைப் பற்றி, நீ பரவு,-நெஞ்சே!-படர்சடை ஈசன்பாலே! |
|
உரை
|
|
|
|
|
590 | கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து, மால், கருமம் முற்றி, திடல் இடைச் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத் தொடல் இடை வைத்து நாவில் சுழல்கின்றேன், தூய்மை இன்றி, உடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு, நானே. |
|
உரை
|
|
|
|
|
591 | குன்று போல்-தோள் உடைய குணம் இலா அரக்கர் தம்மைக் கொன்று போர் ஆழி அம் மால் வேட்கையால் செய்த கோயில்- நன்று போல் நெஞ்சமே! நீ நன்மையை அறிதியாயில், சென்று நீ தொழுது உய்கண்டாய்!-திரு இராமேச்சுர(ம்)மே. |
|
உரை
|
|
|
|
|
592 | வீரம் மிக்கு எயிறு காட்டி விண் உற நீண்டு அரக்கன் கூரம் மிக்கவனைச் சென்று கொன்று உடன் கடல் படுத்துத் தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக் கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே. |
|
உரை
|
|
|
|
|
593 | “ஆர், வலம் நம்மின் மிக்கார்?’ என்ற அவ் அரக்கர் கூடிப் போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித் தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச் சேர்,-மட நெஞ்சமே!-நீ செஞ்சடை எந்தைபாலே! |
|
உரை
|
|
|
|
|
594 | வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை எல்லாம் போக்கினால் புடைத்து, அவர்கள் உயிர் தனை உண்டு, மால் தான் தேக்கு நீர் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை நோக்கினால் வணங்குவார்க்கு நோய்வினை நுணுகும் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
595 | பலவும் நாள் தீமை செய்து பார் தன் மேல் குழுமி வந்து கொலை விலார் கொடியர் ஆய அரக்கரைக் கொன்று வீழ்த்த, சிலையினான் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத் தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம்; தவம் அது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
596 | கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம் வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு, தேடி, மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை நாடி வாழ்!-நெஞ்சமே, நீ!-நன்நெறி ஆகும் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
597 | வன்கண்ணர், வாள் அரக்கர், -வாழ்வினை ஒன்று அறி(ய்)யார் புன் கண்ணர் ஆகி நின்று-போர்கள் செய்தாரை மாட்டி, செங்கண் மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத் தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம், தலைவன் பாலே. |
|
உரை
|
|
|
|
|
598 | வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர் கோனை விரைய முற்று அற ஒடுக்கி, மீண்டு மால் செய்த கோயில்- திரைகள் முத்தால் வணங்கும்-திரு இராமேச்சுரத்தை உரைகள் பத்தால் உரைப்பார், உள்குவார், அன்பினாலே. |
|
உரை
|
|
|
|