தொடக்கம் |
|
|
4.64 திருவீழிமிழலை திருநேரிசை |
619 | பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; பூண நூலர் சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர்; நஞ்சு அழுந்து கண்டர்; கீதத்தின் பொலிந்த ஓசைக் கேள்வியர்; வேள்வியாள வேதத்தின் பொருளர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|
|
620 | காலையின் கதிர்செய் மேனி, கங்குலின் கறுத்த கண்டர் மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர்; மதுவும் பாலும் ஆலையில் பாகும் போல அண்ணித் திட்டு, -அடியார்க்கு,-என்றும் வேலையின் அமுதர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|
|
621 | வரும் தினம், நெருநல், இன்று ஆய், வழங்கின நாளர்; ஆல்கீழ் இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர்; இருவரோடும் பொருந்தினர்; பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் விருந்தினர்-திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|
|
622 | நிலை இலா ஊர் மூன்று ஒன்ற-நெருப்பு, -அரி காற்று அம்பு ஆக, சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர்; தேவர் தங்கள் தலையினால்-தரித்த என்பும், தலைமயிர் வடமும், பூண்ட விலை இலா வேடர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|
|
623 | மறை இடைப் பொருளர்; மொட்டின் மலர் வழி வாசத் தேனர் கறவு இடைப் பாலின் நெய்யர்; கரும்பினில் கட்டியாளா பிறை இடைப் பாம்பு கொன்றைப் பிணையல் சேர் சடையுள் நீரர் விறகு இடைத் தீயர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|
|
624 | எண் அகத்து இல்லை அல்லர்; உளர் அல்லர்; இமவான் பெற்ற பெண் அகத்தர்; ஐயர்; காற்றில் பெரு வலி இருவர் ஆகி, மண் அகத்து ஐவர்; நீரில் நால்வர்; தீ அதனில் மூவர் விண் அகத்து ஒருவர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|
|
625 | சந்து அணி கொங்கையாள் ஓர் பங்கினர்; சாமவேதர் எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்; அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் வெந்தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|
|
626 | நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம் பூக்கொண்டு(வ்) ஏற்றுழி, ஒரு நாள் ஒன்று குறைய, கண் நிறைய இட்ட ஆற்றலுக்கு ஆழி நல்கி, அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் வீற்றிருந்து அளிப்பர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|
|
627 | சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்வு இடம்; சென்று கூடப் பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர்; இறப்பு இலாளா முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீலகண்டர் வித்தினில் முளையர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|
|
628 | தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி தடை நிலாது பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண் ஆய் நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ, தம் வாள விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே. |
|
உரை
|
|
|
|