தொடக்கம் |
|
|
4.65 திருச்சாய்க்காடு திருநேரிசை |
629 | “தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன் வீடும் நாள் அணுகிற்று” என்று மெய் கொள்வான் வந்த காலன் பாடு தான் செலலும், அஞ்சி, “பாதமே சரணம்” என்ன, சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
630 | வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்-தேவர் அஞ்சி அடைந்து, “நும் சரணம்” என்ன, அருள் பெரிது உடையர் ஆகித் தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
631 | அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் வரணியல் ஆகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய, முரண் இலாச் சிலந்தி தன்னை முடி உடை மன்னன் ஆக்கித் தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
632 | அரும் பெருஞ் சிலைக் கை வேடனாய், விறல் பார்த்தற்கு, அன்று(வ்) உரம் பெரிது உடைமை காட்டி, ஒள் அமர் செய்து, மீண்டே வரம் பெரிது உடையன் ஆக்கி, வாள் அமர் முகத்தில் மன்னும் சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
633 | இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களே மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த, தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று, சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
634 | ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து பூ மலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக் கூர் மழு ஒன்றால் ஓச்ச, குளிர் சடைக் கொன்றை மாலைத்- தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
635 | மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட, ஐயம் இல் அமரர் ஏத்த, ஆயிரம் முகம் அது ஆகி வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும் தையலைச் சடையில் ஏற்றார்-சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
636 | குவப் பெருந் தடக்கை வேடன், கொடுஞ்சிலை இறைச்சிப்பாரம், துவர்ப் பெருஞ் செருப்பால் நீக்கி, தூய வாய்க் கலசம் ஆட்ட, உவப் பெருங் குருதி சோர, ஒரு க(ண்)ண்ணை இடந்து அங்கு அப்பத் தவப் பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
637 | நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு நல் ஞானத்தோடு மிக்க பூசனைகள் செய்வான், மென்மலர் ஒன்று காணாது, “ஒக்கும், என் மலர்க்கண்” என்று அங்கு ஒரு க(ண்)ண்ணை இடந்தும் அப்ப, சக்கரம் கொடுப்பர் போலும்-சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
638 | புயம் கம் ஐஞ்-ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடிச் சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச, வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி, மீண்டே சயம் பெற நாமம் ஈந்தார்-சாய்க்காடு மேவினாரே. |
|
உரை
|
|
|
|