4.70 திருநனிபள்ளி
திருநேரிசை
679முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை,
சொல்-துணை ஆயினானை, சோதியை, ஆதரித்து(வ்)
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு
நல்-துணை ஆவர்போலும், நனிபள்ளி அடிகளாரே.
உரை
   
680புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி போற்ற மாட்டா,
வலம் செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த,
சிலந்தியை அரையன் ஆக்கிச் சீர்மைகள் அருள வல்லார்
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே.
உரை
   
681எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னிக்
கண் பழக்கு ஒன்றும் இன்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன்
செண்பகம், திகழும் புன்னை, செழுந் திரள் குரவம், வேங்கை,
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே!
உரை
   
682பண்ணின் ஆர் பாடல் ஆகி, பழத்தினில் இரதம் ஆகி,
கண்ணின் ஆர் பார்வை ஆகி, கருத்தொடு கற்பம் ஆகி,
எண்ணினார் எண்ணம் ஆகி, ஏழ் உலகு அனைத்தும் ஆகி,
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்-நனிபள்ளி அடிகளாரே.
உரை
   
683துஞ்சு இருள் காலை மாலை, தொடர்ச்சியை மறந்து இராதே
அஞ்சு எழுத்து ஓதில், நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும்;
வஞ்சனைப் பால்சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த
நஞ்சு அமுது ஆக்குவித்தார், நனிபள்ளி அடிகளாரே.
உரை
   
684செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காணமாட்டான்;
அம் மலர்ப்பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்;
“நின்மலன்” என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும்
நம் மலம் அறுப்பர் போலும், நனிபள்ளி அடிகளாரே.
உரை
   
685அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்
விரவித் தம் அடியர் ஆகி வீடு இலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார்-நனிபள்ளி அடிகளாரே.
உரை
   
686மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்;
புண்ணுளே புரை புரையன் புழுப் பொதி பொள்ளல் ஆக்கை
உரை
   
687பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க,
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி,
பத்துவாய் கீதம் பாட, பரிந்து அவற்கு அருள் கொடுத்தார்
பத்தர் தாம் பரவி ஏத்தும் நனிபள்ளிப் பரமனாரே.
உரை