தொடக்கம் |
|
|
4.73 திருச்சேறை திருநேரிசை |
707 | பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும் அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத் திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே. |
|
உரை
|
|
|
|
|
708 | ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணராக் குண்டர் வார்த்தையை மெய் என்று எண்ணி, மயக்கில் வீழ்ந்து, அழுந்துவேனைப் பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் தீர்த்து அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே. |
|
உரை
|
|
|
|
|
709 | ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெங் கானகத்துச் சென்று அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே. |
|
உரை
|
|
|
|
|
710 | அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக காலம் வஞ்சம் இல் தவத்துள் நின்று, மன்னிய பகீரதற்கு வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை செஞ்சடை ஏற்றார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே. |
|
உரை
|
|
|
|
|
711 | நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு ஆவின் பாலைக் கறந்து கொண்டு ஆட்ட, கண்டு கறுத்த தன் தாதை தாளை எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்னச் சிறந்த பேறு அளித்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே. |
|
உரை
|
|
|
|
|
712 | விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம் உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச் சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே. |
|
உரை
|
|
|
|
|
713 | சுற்றும் முன் இமையோர் நின்று, தொழுது, தூ மலர்கள் தூவி, “மற்று எமை உயக்கொள்!” என்ன, மன்னு வான் புரங்கள் மூன்றும் உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல்வாயின் வீழச் செற்று, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே. |
|
உரை
|
|
|
|
|
714 | முந்தி இவ் உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும், “எம் தனி நாதனே!” என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய, அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம் செந்தழல் ஆனார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே. |
|
உரை
|
|
|
|
|
715 | ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி, பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று, மருவி, “எம்பெருமான்!” என்ன, மலர் அடி மெள்ள வாங்கித் திரு அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே. |
|
உரை
|
|
|
|