4.79 பொது
குறைந்த திரு நேரிசை
764தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து
அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய
செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
765மக்களே, மணந்த தாரம், வல் வயிற்று அவரை, ஓம்பும்
சிக்குளே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம் அது ஓரேன்;
கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும்,
இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
766கூழையேன் ஆகமாட்டேன், கொடு வினைக் குழியில் வீழ்ந்து
ஏழின் இன் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்;
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தை மார் தமக்கும் பொல்லேன்
ஏழையேன் ஆகி, நாளும் என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
767முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்;
பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்;
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை
என் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
768கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்;
பிறை நுதல் பேதை மாதர் பெய் வளையார்க்கும் அல்லேன்;
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
769வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய,
தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல்-எரி மடுத்த நீரில்-
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல்-தெளிவு இலாதேன்,
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
உரை