தொடக்கம் |
|
|
4.80 கோயில் திருவிருத்தம் |
770 | பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும் வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள், ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|
|
771 | பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி, புலி அதளன், உரு உடை அம் மலைமங்கை மணாளன், உலகுக்கு எல்லாம் திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|
|
772 | தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான், பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன், உடுத்த துகில் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|
|
773 | “வைச்ச பொருள் நமக்கு ஆகும்” என்று எண்ணி நமச்சிவாய அச்சம் ஒழிந்தேன்; அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற பிச்சன், பிறப்பு இலி, பேர் நந்தி, உந்தியின் மேல் அசைத்த கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|
|
774 | செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், மைஞ் ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க நெய்ஞ் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான், கைஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|
|
775 | ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை ஆட்கொண்டவன், தேன் ஒத்து எனக்கு இனியான், தில்லைச் சிற்றம்பலவன், எம் கோன், வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|
|
776 | தெரித்த கணையால்-திரி புரம் மூன்றும் செந் தீயில் மூழ்க எரித்த இறைவன், இமையவர் கோமான், இணை அடிகள் தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|
|
777 | சுற்றும் அமரர், சுரபதி, “நின் திருப்பாதம் அல்லால் பற்று ஒன்று இலோம்” என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான், செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான், தில்லை அம்பலவன், நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|
|
778 | சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள் வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|
|
779 | தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து, அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன் நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே? |
|
உரை
|
|
|
|