தொடக்கம் |
|
|
4.82 திருக்கழுமலம் திருவிருத்தம் |
790 | பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம் கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே? |
|
உரை
|
|
|
|
|
791 | கடை ஆர் கொடி நெடுமாடங்கள் எங்கும் கலந்து இலங்க உடையான், உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி விடைதான் உடைய அவ் வேதியன் வாழும் கழுமலத்துள அடைவார்-வினைகள் அவை என்க!-நாள் தொறும் ஆடுவரே! |
|
உரை
|
|
|
|
|
792 | திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப, முகந்து கொண்டு நுரைவாய் நுளைச்சியர் ஓடிக் கழு மலத்துள்(ள்) அழுந்தும் விரை வாய் நறுமலர் சூடிய விண்ணவன் தன் அடிக்கே வரையாப் பரிசு இவை நாள்தொறும் நம் தமை ஆள்வனவே. |
|
உரை
|
|
|
|
|
793 | விரிக்கும், அரும் பதம்; வேதங்கள் ஓதும்; விழுமிய நூல் உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர்; கேட்கில் உலகம் முற்றும் இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட, கழுமலவன் நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே. |
|
உரை
|
|
|
|
|
794 | சிந்தித்து எழு,-மனமே!-நினையா முன் கழுமலத்தை! பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை, பசுபதியை, “சந்தித்த காலம் அறுத்தும்” என்று எண்ணி இருந்தவர்க்கு முந்தித் தொழு கழல் நாள்தொறும் நம் தம்மை ஆள்வனவே. |
|
உரை
|
|
|
|
|
795 | நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்து ஆய், அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம், சிலையில்-திரி புரம் மூன்றும் எரித்தார், தம் கழுமலவர், அலரும் கழல் அடி நாள் தொறும் நம் தமை ஆள்வனவே. |
|
உரை
|
|
|
|
|
796 | முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்து, உடன் மொய்த்து அமரர் சுற்றிக் கிடந்து, தொழப்படுகின்றது-சூழ் அரவம் தெற்றிக் கிடந்து வெங் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் கற்றைச் சடை முடியார்க்கு இடம் ஆய கழுமலமே. |
|
உரை
|
|
|
|
|
797 | உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்து அடையும் உனை வந்து அடைந்தார், அமரர் அடி இணைக்கீழ்; நடையும் விழவொடு நாள்தொறும் மல்கும் கழுமலத்துள விடையன் தனிப் பதம் நாள் தொறும் நம் தமை ஆள்வனவே. |
|
உரை
|
|
|
|
|
798 | பரவைக்-கடல் நஞ்சம் உண்டதும் இல்லை; இப் பார்முழுதும் நிரவிக் கிடந்து தொழப்படுகின்றது;-நீண்டு இருவர் சிரமப்பட வந்து சார்ந்தார், கழல் அடி காண்பதற்கே- அரவக் கழல் அடி நாள்தொறும் நம் தமை ஆள்வனவே. |
|
உரை
|
|
|
|
|
799 | கலை ஆர் கடல் சூழ் இலங்கையர் கோன் தன் முடி சிதறத் தொலையா மலர் அடி ஊன்றலும், உள்ளம் விதிர் விதிர்த்துத் தலை ஆய்க் கிடந்து, உயர்ந்தான் தன் கழுமலம் காண்பதற்கே- அலையாப் பரிசு இவை நாள் தொறும் நம் தமை ஆள்வனவே. |
|
உரை
|
|
|
|