தொடக்கம் |
|
|
4.88 திருப்பூந்துருத்தி திருவிருத்தம் |
843 | மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல் போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும் ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|
|
844 | மறி உடையான், மழுவாளினன், மாமலை மங்கை ஓர்பால் குறி உடையான், குணம் ஒன்று அறிந்தார் இல்லை; கூறில், அவன் பொறி உடை வாள் அரவத்தவன்; பூந்துருத்தி(ய்) உறையும் அறிவு உடை ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|
|
845 | மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால் அறுத்தனை, ஆல் அதன் கீழனை, ஆல்விடம் உண்டு அதனைப் பொறுத்தனை, பூதப்படையனை, பூந்துருத்தி(ய்) உறையும் நிறுத்தனை, நீலமிடற்றனை-யான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|
|
846 | உருவினை, ஊழி முதல்வனை, ஓதி நிறைந்து நின்ற திருவினை, தேசம் படைத்தனை, சென்று அடைந்தேனுடைய பொரு வினை எல்லாம் துரந்தனை, பூந்துருத்தி(ய்) உறையும் கருவினை, கண் மூன்று உடையனை-யான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|
|
847 | தக்கன்தன் வேள்வி தகர்த்தவன்,-சாரம், அது(வ்) அன்று-கோள மிக்கன மும்மதில் வீய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால் புக்கனன், பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி(ய்) உறையும் நக்கனை, நங்கள் பிரான்தனை-நான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|
|
848 | அருகு அடை மாலையும் தான் உடையான், அழகால் அமைந்த உரு உடை மங்கையும் தன் ஒரு பால் உலகு ஆயும் நின்றான், பொருபடை வேலினன், வில்லினன், பூந்துருத்தி(ய்) உறையும் திரு உடைத் தேச மதியனை-யான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|
|
849 | மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்கக் கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால் பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி(ய்) உறையும் அன்றியும் செய்த பிரான் தனை-யான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|
|
850 | மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர் பால் மகிழ்ந்தான், “என் நிறம்?” என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் பொன் நிறம் மிக்க சடையவன், பூந்துருத்தி(ய்) உறையும் எல்-நிற எந்தை பிரான் தனை-யான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|
|
851 | அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவு அரிய செந்தியை வாட்டும் செம்பொன்னினை, சென்று அடைந்தேனுடைய புந்தியைப் புக்க அறிவினை, பூந்துருத்தி(ய்) உறையும் நந்தியை, நங்கள் பிரான் தனை-நான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|
|
852 | பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு; சடை இடையே வைக்கையும் வான் இழி கங்கையும்; மங்கை நடுக்கு உறவே மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி(ய்) உறையும் மிக்க நல்வேத விகிர்தனை-நான் அடி போற்றுவதே. |
|
உரை
|
|
|
|