தொடக்கம் |
|
|
4.89 திருநெய்த்தானம் திருவிருத்தம் |
853 | பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருள கார் அடைந்த(க்) கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் ஊர் அடைந்து இவ் உலகில் பலி கொள்வது நாம் அறியோம்- நீர் அடைந்த(க்) கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே. |
|
உரை
|
|
|
|
|
854 | தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்! நின் திருச்சடை மேல் பாய்ந்த கங்கைப் புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப, ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!-அடியேற்கு உரை நீ, ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே! |
|
உரை
|
|
|
|
|
855 | கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம், ஒன்னார் மதில் மேல் சென்று அடைந்து ஆடி, பொருததும், -தேசம் எல்லாம் அறியும்;- குன்று அடைந்து ஆடும் குளிர்ப்பொழில் காவிரியின் கரை மேல், சென்று அடைந்தார் வினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே! |
|
உரை
|
|
|
|
|
856 | கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து நட்டம் பல பயின்று ஆடுவர்; நாகம் அரைக்கு அசைத்துச் சிட்டர் திரிபுரம் தீ எழச் செற்ற சிலை உடையான் இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே. |
|
உரை
|
|
|
|
|
857 | கொய்ம் மலர்க் கொன்றை, துழாய், வன்னி, மத்தமும், கூவிளமும், மொய்ம்மலர், வேய்ந்த விரிசடைக்கற்றை விண்ணோர் பெருமான்; மைம்மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர் பால் மகிழ்ந்தான்; நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே. |
|
உரை
|
|
|
|
|
858 | பூந்தார் நறுங் கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து கூர்ந்து ஆர் விடையினை ஏறி, பல் பூதப்படை நடுவே போந்தார்-புற இசை பாடவும் ஆடவும் கேட்டு அருளிச் சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே. |
|
உரை
|
|
|
|
|
859 | பற்றின பாம்பன்; படுத்த புலி உரித்-தோல் உடையன்; முற்றின மூன்றும் மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்; சுற்றிய பூதப்படையினன்சூலம் மழு ஒருமான், செற்று நம் தீவினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே. |
|
உரை
|
|
|
|
|
860 | விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம் உண்ட கண்டன்; உரித்த கரிஉரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே- எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டு கொண்ட, தரித்த உமையவளோடு, நெய்த்தானத்து இருந்தவனே. |
|
உரை
|
|
|
|
|
861 | தூங்கான்; துளங்கான்; துழாய், கொன்றை, துன்னிய செஞ்சடை மேல் வாங்கா மதியமும், வாள் அரவும், கங்கை, தான் புனைந்தான்; தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து நீங்கான், உமையவளோடு; நெய்த்தானத்து இருந்தவனே. |
|
உரை
|
|
|
|
|
862 | ஊட்டி நின்றான், பொரு வானில் அம் மும்மதில் தீ; அம்பினால் மாட்டி நின்றான்; அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக் காட்டி நின்றான்; கதமாக் கங்கை பாய ஓர் வார்சடையை நீட்டி நின்றான்திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே. |
|
உரை
|
|
|
|