4.91 திருஐயாறு
திருவிருத்தம்
873குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி! குறுவித்த நோய்
உறுவித்தவா! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அறிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
செறிவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
உரை
   
874கூர்வித்தவா, குற்றம் நோய்வினை காட்டியும்! கூர் வித்த நோய்
ஊர்வித்தவா! உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
ஆர்வித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சேர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
உரை
   
875தாக்கினவா, சலம் மேல் வினை காட்டியும்! தண்டித்த நோய்
நீக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
ஆக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
நோக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
உரை
   
876தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச் சலம் அதனால்
நெருக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
உருக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
பெருக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
உரை
   
877இழிவித்த ஆறு, இட்ட நோய் வினைக் காட்டி! இடர்ப்படுத்துக்
கழிவித்தவா! கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி
அழிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொழுவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
உரை
   
878இடைவித்த ஆறு, இட்ட நோய்வினை காட்டி! இடர்ப்படுத்து(வ்)
உடைவித்த ஆறு! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அடைவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
உரை
   
879படக்கினவா, பட நின்று பல்-நாளும்! படக்கின நோய்
அடக்கின ஆறு! அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம்
அடக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
உரை
   
880மறப்பித்தவா, வல்லை நோய்வினை காட்டி! மறப்பித்த நோய்
துறப்பித்தவா! துக்க நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
இறப்பித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சிறப்பித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
உரை
   
881துயக்கினவா, துக்க நோய்வினை காட்டி! துயக்கின நோய்
இயக்கின ஆறு! இட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்து அருளி
அயக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
மயக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
உரை
   
882கறுத்து மிட்டார், கண்டம்; கங்கை சடை மேல் கரந்து அருள
இறுத்து மிட்டார், இலங்கைக்கு இறை தன்னை இருபது தோள்
அறுத்து மிட்டார், அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே;
பொறுத்தும் இட்டார்-தொண்டனேனைத் தன் பொன் அடிக் கீழ் எனையே!
உரை