தொடக்கம் |
|
|
4.92 திருஐயாறு திருவிருத்தம் |
883 | சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்து இருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன-பாம்பு சுற்றி அந்திப்பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
884 | இழித்தன ஏழ் ஏழ்பிறப்பும் அறுத்தன; என் மனத்தே பொழித்தன; போர் எழில் கூற்றை உதைத்தன; போற்றவர்க்கு ஆய்க் கிழித்தன, தக்கன் கிளர் ஒளி வேள்வியைக் கீழ முன் சென்று அழித்தன-ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
885 | மணி நிறம் ஒப்பன; பொன் நிறம் மன்னின; மின் இயல் வாய் கணி நிறம் அன்ன; கயிலைப் பொருப்பன; காதல் செய்யத் துணிவன; சீலத்தர் ஆகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு அணியன; சேயன, தேவர்க்கு;-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
886 | இருள் தரு துன்பப்படலம் மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும் பொருள் தரு கண் இழந்து, உண் பொருள் நாடி, புகல் இழந்த குருடரும் தம்மைப் பரவ, கொடு நரகக் குழி நின்று அருள் தரு கை கொடுத்து ஏற்றும்-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
887 | எழுவாய் இறுவாய் இலாதன; எங்கள் பிணி தவிர்த்து வழுவா மருத்துவம் ஆவன; மா நரகக் குழிவாய் விழுவார் அவர் தம்மை வீழ்ப்பன; மீட்பன; மிக்க அன்போடு அழுவார்க்கு அமுதங்கள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
888 | துன்பக்கடல் இடைத் தோணித்தொழில் பூண்டு, தொண்டர் தம்மை இன்பக்கரை முகந்து ஏற்றும் திறத்தன; மாற்று அயலே பொன் பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும் அப் பொய் பொருந்தா அன்பர்க்கு அணியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
889 | களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரிவாய்க் குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோது இல் செந்தேன் தெளித்து, சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப அளித்து, பெருஞ்செல்வம் ஆக்கும்-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
890 | திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்து உடலை வருத்திக் கடி மலர்வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்- அருத்தித்து அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
891 | பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப, பரந்து பல்பேய் கூடி முழவக் குவி கவிழ் கொட்ட, குறு நரிகள் நீடும் குழல் செய்ய, வையம் நெளிய நிணப் பிணக்காட்டு ஆடும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
892 | நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன-பாங்கு அறியா என் போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் அம் போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
893 | மலையான் மடந்தை மனத்தன; வானோர் மகுடம் மன்னி நிலை ஆய் இருப்பன; நின்றோர் மதிப்பன; நீள் நிலத்துப் புலை ஆடு புன்மை தவிர்ப்பன-பொன்னுலகம்(ம்) அளிக்கும், அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த, ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
894 | பொலம் புண்டரிகப் புது மலர் போல்வன; “போற்றி!” என்பார் புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன; பொன் அனையாள் சிலம்பும், செறி பாடகமும், செழுங் கிண்கிணித்திரளும், அலம்பும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
895 | உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன; ஓதி நன் நூல் கற்றார் பரவப் பெருமை உடையன; காதல் செய்ய கிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்; அற்றார்க்கு அரும்பொருள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
896 | வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன; மந்திரிப்பார் ஊனைக் கழித்து உய்யக் கொண்டு அருள் செய்வன; உத்தமர்க்கு ஞானச் சுடர் ஆய் நடுவே உதிப்பன; நங்கை அஞ்ச ஆனை உரித்தன-காண்க!-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
897 | மாதிரம், மா நிலம், ஆவன; வானவர் மா முகட்டின் மீதன; மென் கழல் வெங் கச்சு வீக்கின; வெந் நமனார் தூதரை ஓடத் துரப்பன; துன்பு அறத் தொண்டு பட்டார்க்கு ஆதரம் ஆவன காண்க!-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
898 | பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு அருளால் ஏணிப்படி நெறி இட்டுக் கொடுத்து, இமையோர் முடி மேல் மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று, வயிரம் மன்னி, ஆணிக் கனகமும் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
899 | ஓதிய ஞானமும், ஞானப்பொருளும், ஒலி சிறந்த வேதியர் வேதமும், வேள்வியும், ஆவன; விண்ணும் மண்ணும் சோதி அம் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன, தீ, மதியோடு; ஆதியும் அந்தமும் ஆன-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
900 | சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை-சுரும்பொடு வண்டு அணங்கும் குழலி-அணி ஆர் வளைக்கரம் கூப்பி நின்று, வணங்கும் பொழுதும், வருடும் பொழுதும், வண் காந்தள் ஒண்போது அணங்கும் அரவிந்தம் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
901 | சுழல் ஆர் துயர்வெயில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும் நிழல் ஆவன; என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக் கழலா வினைகள் கழற்றுவ; காலவனம் கடந்த அழல் ஆர் ஒளியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|
|
902 | வலியான் தலைபத்தும் வாய் விட்டு அலற வரை அடர்த்து மெலியா வலி உடைக் கூற்றை உதைத்து, விண்ணோர்கள் முன்னே பலி சேர் படு கடைப் பார்த்து, பல்-நாளும் பலர் இகழ அலி ஆம் நிலை நிற்கும்-ஐயன் ஐயாறன் அடித்தலமே. |
|
உரை
|
|
|
|