தொடக்கம் |
|
|
4.95 திருவீழிமிழலை திருவிருத்தம் |
923 | வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர் மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
924 | அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்! அண்டம் எண்திசையும் பந்தமும் வீடும் பரப்புகின்றீர்! பசு ஏற்று உகந்தீர் வெந்தழல் ஓம்பும் மிழலை உள்ளீர்!-என்னைத் தென்திசைக்கே உந்திடும்போது மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
925 | அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல் அம்பரம், ஆகி நின்றீர் கலைக்கன்று சேரும் கரத்தீர்! கலைப்பொருள் ஆகி நின்றீர் விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் குலைக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
926 | தீத் தொழிலான் தலை தீயில் இட்டு, செய்த வேள்வி செற்றீர் பேய்த்தொழிலாட்டியைப் பெற்று உடையீர்! பிடித்துத் திரியும் வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர்! விக்கி அஞ்சு எழுத்தும் ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
927 | தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும், பத்திமையால் மேற்பட்ட அந்தணர் வீழியும், என்னையும் வேறு உடையீர் நாள் பட்டு வந்து பிறந்தேன், இறக்க, நமன் தமர்தம் கோள்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
928 | கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர் உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர் கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
929 | தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர்! தூய வெள் எருது ஒன்று ஏற்றம் கொண்டீர்! எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர் சீற்றம் கொண்டு என்மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெங் கூற்றம் கண்டு உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
930 | சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிச் சொக்கம் பயின்றீர் பழிப்பட்ட பாம்பு அரைப் பற்று உடையீர்! படர் தீப் பருக விழிப்பட்ட காமனை வீட்டீர்! மிழலை உள்ளீர்!-பிறவிச் சுழிப்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
931 | பிள்ளையின் பட்ட பிறைமுடியீர்! மறை ஓத வல்லீர் வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர்! விரிநீர் மிழலை உள்ள நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்தம் கொள்ளையில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
932 | கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும் மெய்யும் நெறுக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் வெறிக் கொன்றைமாலை முடியீர்! விரிநீர் மிழலை உள்ள இறக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|