4.99 திருக்கச்சி ஏகம்பம்
திருவிருத்தம்
956ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே
காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப்
போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே!
உரை
   
957எத்தைக்கொடு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து,-எனை,-
கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்தென்னக் கோகு செய்தாய்?-
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவளத்-
தொத்தினை ஏய்க்கும் படியாய்! பொழில் கச்சி ஏகம்பனே!
உரை
   
958மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்ப்
பொய் அம்பு எய்து, ஆவம் அருளிச்செய்தாய்; புரம் மூன்று எரியக்
கை அம்பு எய்தாய்; நுன் கழல் அடி போற்றாக் கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தாய்-கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே!
உரை
   
959குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்,
கறைக்கண்ட! நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே?
பிறைத்துண்ட வார்சடையாய்! பெருங் காஞ்சி எம் பிஞ்ஞகனே!
உரை
   
960உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்; உள்குவார் வினையைக்
கரைக்கும் எனக் கைதொழுவது அல்லால், கதிரோர்கள் எல்லாம்,
விரைக்கொள் மலரவன், மால், எண்வசுக்கள், ஏகாதசர்கள்,
இரைக்கும் அமிர்தர்க்கு, அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே.
உரை
   
961கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு(வ்)
உருகிற்று, என் உள்ளமும்; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்;
திரு ஒற்றியூரா! திரு ஆலவாயா! திரு ஆரூரா!
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்-கச்சி ஏகம்பனே!
உரை
   
962அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்,
உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்;
புரிதரு புன் சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;-
எரிதரு செஞ்சடை ஏகம்ப!-என்னோ, திருக்குறிப்பே?
உரை
   
963பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே!
கூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்-நாள்
சாம்பலைப் பூசி, தரையில் புரண்டு, “நின் தாள் சரண்” என்று
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய்-கச்சி ஏகம்பனே!
உரை
   
964ஏன்று கொண்டாய், என்னை; எம்பெருமான்! இனி, “அல்லம்” என்னில்,
சான்று கண்டாய் இவ் உலகம் எல்லாம்; தனியேன் என்று என்னை
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய்; பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்டாய்-கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே!
உரை
   
965உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச் சூளைகள்; வாய்தல் பற்றித்
துன்றி நின்றார், தொல்லை வானவர் ஈட்டம்; பணி அறிவான்
வந்து நின்றார், அயனும் திருமாலும்;-மதில் கச்சியாய்!-
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ, வந்து இறைஞ்சுவதே?
உரை