தொடக்கம் |
|
|
4.104 திருஅதிகைவீரட்டானம் திருவிருத்தம் |
1002 | மாசு இல் ஒள்வாள் போல் மறியும் மணி நீர்த் திரைத் தொகுதி ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கல் உற்றால், பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு, வீசும் கெடில வடகரைத்தே-எந்தை வீரட்டமே. |
|
உரை
|
|
|
|
|
1003 | பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப் படுகர் அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப, அருகு உலவும் செங்கால் குருகு இவை சேரும் செறி கெடிலக் கரைத்தே- வெங் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே. |
|
உரை
|
|
|
|
|
1004 | அம் மலர்க் கண்ணியர் அஞ்சனம்,- செந்துவர்வாய் இளையார்- வெம் முலைச் சாந்தம், விலை பெறு மாலை, எடுத்தவர்கள், தம் மருங்கிற்கு இரங்கார், தடந் தோள் மெலியக் குடைவார் விம்மு புனல் கெடிலக் கரைத்தே-எந்தை வீரட்டமே. |
|
உரை
|
|
|
|
|
1005 | மீன் உடைத் தண்புனல் வீரட்டரே! நும்மை வேண்டுகின்றது யான் உடைச் சில்குறை ஒன்று உளதால்; நறுந்தண் எருக்கின் தேன் உடைக் கொன்றைச் சடை உடைக் கங்கைத் திரை தவழும் கூன் உடைத் திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்மினே! |
|
உரை
|
|
|
|
|
1006 | ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம் அகவன் திரிந்து, வேர் அட்ட, நிற்பித்திடுகின்றதால்-விரிநீர்ப் பரவைச் சூர் அட்ட வேலவன் தாதையை, சூழ் வயல் ஆர் அதிகை- வீரட்டத்தானை, விரும்பா அரும்பாவவேதனையே. |
|
உரை
|
|
|
|
|
1007 | படர் பொன்சடையும், பகுவாய் அரவும், பனிமதியும், சுடலைப் பொடியும், எல்லாம் உளவே; அவர் தூய தெண் நீர்க் கெடிலக் கரைத் திரு வீரட்டர் ஆவர்; கெட்டேன்! அடைந்தார் நடலைக்கு நல்-துணை ஆகும்கண்டீர், அவர் நாமங்களே. |
|
உரை
|
|
|
|
|
1008 | காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகிக் கண் ஆர் கெடில நாள் அங்கடிக்கு ஓர் நகரமும், மாதிற்கு நன்கு இசைந்த தாளங்கள் கொண்டும், குழல் கொண்டும், யாழ் கொண்டும், தாம் அங்ஙனே வேடங்கள் கொண்டும், விசும்பு செல்வார் அவர்-வீரட்டரே. |
|
உரை
|
|
|
|