4.106 திருக்கழிப்பாலை
திருவிருத்தம்
1013நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று,
கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்!
பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்;
எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே!
உரை
   
1014பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை
பொரு மால் கரைமேல்-திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும்
கரு மா மிடறு உடைக் கண்டன், எம்மான் கழிப்பாலை எந்தை,
பெருமான் அவன்,என்னை ஆள் உடையான், இப் பெரு நிலத்தே.
உரை
   
1015நாள்பட்டு இருந்து இன்பம் எய்தல் உற்று, இங்கு நமன்தமரால்
கோட்பட்டு ஒழிவதன் முந்து உறவே, குளிர் ஆர் தடத்துத்
தாள் பட்ட தாமரைப் பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு
ஆட் பட்டொழிந்தம் அன்றே, வல்லம் ஆய் இவ் அகலிடத்தே!
உரை