4.108 திருமாற்பேறு
திருவிருத்தம்
1026மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன; மாவலிபால்
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன; கண்ட தொண்டர்
பேணிக் கிடந்து பரவப்படுவன; பேர்த்தும் அஃதே;
மாணிக்கம் ஆவன-மாற்பேறு உடையான் மலர் அடியே.
உரை
   
1027கருடத் தனிப்பாகன் காண்டற்கு அரியன; காதல் செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன; கோலம் மல்கும்
செருடக் கடிமலர்ச் செல்வி தன் செங்கமலக்கரத்தால்
வருடச் சிவப்பன-மாற்பேறு உடையான் மலர் அடியே.
உரை