தொடக்கம் |
|
|
4.110 “பசுபதி” திருவிருத்தம் |
1031 | சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி, ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும் காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல் பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே! |
|
உரை
|
|
|
|
|
1032 | உடம்பைத் தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்-இருள் ஓடச் செந்தீ அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா! அழலே உமிழும் படம் பொத்து அரவு அரையாய்! எம்மை ஆளும் பசுபதியே! |
|
உரை
|
|
|
|
|
1033 | தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும் மூரித் திரைப் பௌவம் நீக்குகண்டாய்-முன்னை நாள் ஒரு கால் வேரித் தண் பூஞ் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழச் செந்தீப் பாரித்த கண் உடையாய்! எம்மை ஆளும் பசுபதியே! |
|
உரை
|
|
|
|
|
1034 | ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும் பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப் பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே! |
|
உரை
|
|
|
|
|
1035 | இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய்-அண்டம் எண் திசையும் சுடர்த் திங்கள் சூடி, சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி, படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே! |
|
உரை
|
|
|
|
|
1036 | அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் நடலைப் படாமை விலக்கு கண்டாய்-நறுங் கொன்றை, திங்கள், சுடலைப் பொடிச்-சுண்ணம், மாசுணம், சூளாமணி, கிடந்து படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே! |
|
உரை
|
|
|
|
|
1037 | துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் மறவித்தொழில் அது மாற்றுகண்டாய்-மதில் மூன்று உடைய அறவைத்தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்- பறவைப்புரம் எரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே! |
|
உரை
|
|
|
|
|
1038 | சித்தத்து உருகி, “சிவன், எம்பிரான்” என்று சிந்தையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்- மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே! |
|
உரை
|
|
|
|