4.112 தனி
திருவிருத்தம்
1050வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு
வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து,
வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே.
உரை
   
1051உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்பக்
கடலைக் கடந்து, உய்யப் போயிடல் ஆகும்; கனகவண்ணப்
படலைச் சடை, பரவைத் திரைக் கங்கை, பனிப்பிறை, வெண்
சுடலைப் பொடி, கடவுட்கு அடிமைக்கண்-துணி, நெஞ்சமே!
உரை
   
1052முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ?
உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின்
என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே.
உரை
   
1053நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே!
உரை
   
1054முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து
எழில் பரஞ்சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர்கண்டீர்;
தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை,
தொழப்படும் தேவர்தம்மால்-தொழுவிக்கும் தன் தொண்டரையே.
உரை
   
1055விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரிநீர் உடுத்த
மண் அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய
பண் அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாய் அடியேன்
கண் அகத்தான்; மனத்தான்; சென்னியான் எம் கறைக்கண்டனே.
உரை
   
1056பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு, கங்காளராய்,
வரும் கடல் மீள நின்று, எம் இறை நல் வீணை வாசிக்குமே.
உரை
   
1057வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?-வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.
உரை
   
1058சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால்,
“இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான்” என்று எதிர்ப்படுமே!
உரை
   
1059என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்? இகலி, உன்னை
நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று, நின் பெருமை-
பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவி, செம்மானம் செற்று,
மின்னை ஒப்பாரி, மிளிரும் சடைக்கற்றை வேதியனே!
உரை