தொடக்கம் |
|
|
1060 | பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல் பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும், பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே. |
|
உரை
|
|
|
|
|
1061 | முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி, வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்! பிணி மேய்ந்து இருந்த இருகால் குரம்பை இது நான் உடையது; இது பிரிந்தால், தருவாய், எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே! |
|
உரை
|
|
|
|
|
1062 | “மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை காவாய்!” என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர் நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால் தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே. |
|
உரை
|
|
|
|
|
1063 | பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள் முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும் நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே? |
|
உரை
|
|
|
|
|
1064 | அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர் செஞ்சடையான், புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும்,- பொய் என்பனோ- சந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே? |
|
உரை
|
|
|
|
|
1065 | உன் மத்தகமலர் சூடி, உலகம் தொழச் சுடலைப் பல்மத்தகம் கொண்டு, பல் கடைதோறும் பலி திரிவான்; என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் தன் மத்தகத்து ஒர் இளம்பிறை சூடிய சங்கரனே. |
|
உரை
|
|
|
|
|
1066 | அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம் உணல்; வரைப்பாவையைக் கொண்டது எக் குடிவாழ்க்கைக்கு? வான் இரைக்கும் இரைப்பா! படுதலை ஏந்து கையா! மறை தேடும் எந்தாய்! உரைப்பார் உரைப்பனவே செய்தியால்-எங்கள் உத்தமனே! |
|
உரை
|
|
|
|
|
1067 | துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து பிறப்பன்; பிறந்தால், “பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர் மறப்பன் கொலோ?” என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே. |
|
உரை
|
|
|
|
|
1068 | வேரி வளாய விரைமலர்க்கொன்றை புனைந்து, அனகன், சேரி வளாய என் சிந்தை புகுந்தான்; திருமுடிமேல் வாரி வளாய வருபுனல் கங்கைசடை மறிவு ஆய், ஏரி வளாவிக் கிடந்தது போலும், இளம்பிறையே. |
|
உரை
|
|
|
|
|
1069 | கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி, பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், “பஞ்சம் உண்டு” என்று என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண் பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே. |
|
உரை
|
|
|
|
|
1070 | மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து மாலும் அறிந்திலன்; மால் உற்றதே; வழிபாடு செய்யும் பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக் காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல் அடியே! |
|
உரை
|
|
|
|