|
பொ-ரை:தனிமுதற்பொருள் உலகங்களுக்கெல்லாம் ஒரே விளக்காய் உள்ளவர்; செம்மையார்; தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுபவர்; முதியார்; இளையார்; நஞ்சுண்ட எம்செல்வர்; அடியாரை அறிவார். கு-ரை: ஒருத்தனார் - ஏகன் அநேகன் இறைவன் (தி.1.ப.5.) உலகங்கட்கு ஒரு சுடர் - `சுடர்விட்டுளன் எங்கள் சோதிழு (தி.3.ப.54.பா.5) `சோதியே சுடரே சூழொளி விளக்கேழு (தி.8 திருவாச.அருட்.1) `சுடர்ச் சோதியுட் சோதியான்ழு (சம்பந்) `தூயநற் சோதியுட் சோதிழு (தி.9 திருவிசைப்.2.) `உலக உயிர்க்கெல்லாம் ஒருகண்ணேழு (இருபா.20). திருத்தம் -செம்மை. திருத்தன் - செம்பொருள். திருப்தி உடையவன் என்றலும் ஆம். திருப்தி எண்குணங்களில் ஒன்று. தீர்த்தனுமாம். உயிர்களைத் திருத்தி யாட்கொண்டவன் என்றலுமொன்று. `திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங்கொள் கயிலாயாழு (தி.7.ப.47.பா.8.) விருத்தனார் இளையார் - `விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்துழு (தி.1.ப.52.பா.6.) அருத்தனார் - எமக்கு மெய்ப் பொருளாயுள்ளவர். அருத்தம் - நீடுலகிற்பெறும் நிலையுடைய பெருஞ்செல்வம். அடியாரை அறிவர் - `அடியார் அடிமை அறிவாய் போற்றிழு (தி.5.ப.30.பா.3.) 4,9 பார்க்க. (தி.5.ப.13.பா.10) பார்க்க. (தி.6.ப.85.பா.2) பார்க்க. (தி.4.ப.23.பா.2.) பார்க்க. |