பாடல் எண் : 10 - 10
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.
10
பொ-ரை: விண்ணுலகத்தவர் விரும்பி எதிர்கொண்டு இன்புறுமாறு மண்ணுலகத்தவர் சென்று வணங்கியெழும் மறைக்காட்டுறையும் பெருமானே! கண்ணினால் உமைக் காணுவதற்காகக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக.
கு-ரை: தேவர்கள் முன்னர்வந்து வழிபாடு முடித்துள்ளாராகலின், பின் வழிபடவரும் மண்ணவர்களை எதிர் கொள்ளுகின்றார்கள் என்க. இவ்வியல்பினையுடையது திருமறைக்காடு என்க.