|
பொ-ரை: ஆகத்தில் ஈண்டிய செஞ்சடைகொண்ட இறைவரே! தொகுதியாய கருமுகிலின் நிறத்தையும் தளிரின் ஒளியையும் உடைய மணிகண்டரே. அடியேனை ஆண்டுகொண்ட நீரே அருள் செய்வீராக; நீண்ட இப்பெருங்கதவின் வலியினை நீக்குவீராக. கு-ரை: ஈண்டு - திரண்டு கூடிய, அதாவது, சேர்த்துக் கட்டிய. மூண்ட கார்முகில் - திரண்டகரிய மேகம். முறி - தளிர். இறைவன் கண்டம் கறுப்பு நிறமும் ஒளியும் உடையது என்க. நீண்ட மரக்கதவின்வலி - நெடுநாளாகத் திறக்கப்படாத கதவின் வலிமையை. |