|
பொ-ரை: ஊர்ப்புறத்து நீரின் மருங்கெலாம் தாழை பூப்பதும், தண்பொழில் சூழ்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! யார்க்குங் காண்டல் அரியீர்! அடிகளே! உமைநோக்கிக் காணும் பொருட்டு இக்கதவைத் திறந்தருள்வீராக! கு-ரை: புறணியருகெலாம் பூக்கும் தாழையும் தண்ணிதாக ஆக்கும் பொழிலும். சூழ் - சூழ்ந்த. அடிகேள் - தவமுனிவரே: உமை - உம்மை. |