பாடல் எண் : 10 - 7
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி யணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.
7
பொ-ரை: வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசும் மேலானவரே! முடிவில்லாதவரே! மறைக்காட்டுறையும் பெருமானே! எம் தந்தையே! அடியார்கள் நேர்வாயிலில் வந்து இறைஞ்சிடும் பொருட்டு இப்பெருங்கதவம் பிணிக்கப்பட்டிருத்தலை நீக்கித் திறந்தருள்வீராக.
கு-ரை: விகிர்தர் - மாறுபட்ட வேடங்களை உடையவர். அந்தமில்லி - கேடில்லாதவர். அணி - அழகிய. எந்தை - என் தந்தையே. பிணி - கதவுகள் பிணிக்கப் பட்டிருத்தல்.